search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Automatic"

    • காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

    பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
    • மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டு வசதிக்கான ஒப்புதல்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ெரயில் நிலையத்தில் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ெரயிலை மீண்டும் நிறுத்தத்துக்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி தென்னக ெரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தலைமை வகித்தார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு தமிழகத்திற்கு கூடுதலாக ெரயில் திட்டங்களை ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி கொடியசைத்து சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்வதை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,

    பாபநாசம் பொது மக்கள் மற்றும் இங்குள்ள அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு ெரயில்வே துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியும், இந்த ெரயில் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    மயிலாடுதுறை ெரயில்வே நிலையத்தில் பயணிகளுக்காக தானியங்கி படிக்கட்டுகளை வசதிக்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கி உள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள ெரயில்களில் பயோ டாய்லெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி காலத்தில் ெரயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே பல நிதிகளை வழங்கி வருகின்றார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ள கோரிக்கைகள் நியாயமானது தான். கடல்பாசி என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடல்பாசியை உற்பத்தியை பெருக்குவதற்கு மீனவ சகோதரிகள் பயன்பெறும் வகையில் கடல்பாசி பூங்கா ராமநாதபுரம், மண்டபம் பகுதிக்கு வழங்கி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்கள்.இந்த திட்ட மதிப்பீடு தற்போது பரிசீலனை உள்ளது.

    இதேபோல் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு,மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நிதியின் கீழ் தமிழகத்திற்கு மட்டும் இரண்டு ஆண்டுகளில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் நிதியை ஒதுக்கி உள்ளோம்.

    சென்னை, திருவொற்றியூரில் 150 கோடி ரூபாயில் தற்போது நடைபெற்று வரும் துறைமுகம் அமைக்கும் பணி 90 சதவீதங்கள் முடிந்துள்ளன. செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம்.

    இந்தியாவில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களை வளப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினம், ஒரிசா, கொச்சின், சென்னை காசிமேடு ஆகிய 4 துறைமுகங்களும் சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் முன்னேற்றம் செய்வதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மழையளவு அறிந்து கொள்ளும் தானியங்கி தொலையுணா்வு அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாநகரில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாநகராட்சி மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தஞ்சாவூா் மாநகரில் 51 வாா்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்களை கண்காணிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில், மொத்தம் 15 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, மாநகரிலுள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையம், அய்யாசாமி வாண்டையாா் நினைவு (பழைய) பஸ் நிலையம், முனிசிபல் காலனி முதன்மைச் சாலை ஆகிய இடங்களில் பொலிவுறு கம்பம் (ஸ்மாா்ட் போல்) என்கிற இலவச வைபை வசதியுடன் கூடிய கண்காணிப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில், தட்பவெப்ப நிலை, மழையளவு அறிந்து கொள்ளும் தானியங்கி தொலையுணா்வு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், அவசர கால அழைப்பு தொலைபேசி, காணொலி காட்சி அழைப்பு உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி, ரம்யா சரவணன், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன், மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ் , மற்றும் கவுண்டர்கள் கலந்து கொண்டனா்.

    ×