search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Automotive"

    • திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
    • அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஆய்வு

    இதையடுத்து, திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

    இங்கு விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள், சாலையின் இரு மார்க்கத்திலும் உரிய இடங்களில் ரம்பிள் கீற்றுக்கள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, மாணிக்கம்பாளை யம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    எச்சரிக்கை

    அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஏற்றி இறக்கி செல்லாத பஸ் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    ×