என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Avathi"
- ‘பேட்ச் ஒர்க்’ பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- முக்கிய சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக புதிய சாலை பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. இதனால் பெரும் பாலான சாலைகள் குண் டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒப்பந்ததா ரர்களின் தரமற்ற பணி களால் தற்போது போடப் படும் சாலைகளின் ஆயுட் காலம் என்பது சில மாதங்கள் மட்டுமே.
இதனால் புதிய சாலை கள் கூட ஒரு சில நாட்களில் படுமோசமாக மாறி விடுகிறது. இதனை அதிகா ரிகளும், மக்கள் பிரதி நிதிகளும் கண்டுகொள்வ தில்லை.
மதுரை நகரில் பெரியார் பஸ் நிலைய பகுதி, திருப்ப ரங்குன்றம் சாலை, பழங்கா நத்தம், ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், அரசரடி, செல்லூர், கண்மாய்கரை ரோடு, காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள், மாரட் வீதிகள், பழைய குயவர் பாளையம் ரோடு, ஆணையூர், கூடல் நகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மீனாட்சி நகர், தபால்தந்தி நகர் உள்ளிட்ட 90 சதவீத சாலை கள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலைகளில் ஏற்பட் டுள்ள பள்ளங்க ளால் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் செல் பவர்கள் அடிக்கடி விபத் தில் சிக்குகின்றனர். மழை காலங்களில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.
மதுரை நகரில் சாலைகள் பராமரிப்பு குறித்து பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை நகரில் முக்கிய சாலைகளில் பேட்ச் ஒர்க் (ஒட்டு வேலை) தீவிரமாக நடக்கிறது. சாலைகளை முழுமையாக தோண்டி புதிய சாலைகளை போடாமல் பள்ளம் ஏற்பட் டுள்ள பகுதிகளில் மட்டும் தார் கலவைகளை போட்டு சமப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனால் பயனில்லாமல் உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது. சாலைகள் ஒட்டுபோட்ட இடத்தில் தரமான கலவைகள் பயன்படுத்தாததால் சிறிய மழைக்கே அவைகள் பெயர்ந்து கரைந்தோடி விட்டது. இதனால் அரசின் நிதி வீணாக்கியதை தவிர எந்த பலனும் இல்லை. தரமற்ற சாலைகளால் மதுரை நகர வாசிகளுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது தெரிய வில்லை.
அண்மையில் வெளி யான ஒரு படத்தில் நடிகர் யோகிபாபு புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் பணிக்கு செல்வார். அதில் கட்டிடங்கள் பெயர்ந்து வரும். மதுரை நகர சாலைகளில் மேற் கொள்ளப்பட்ட பேட்ச் ஒர்க் பணி அந்த காட்சியை நினைவூட்டுவதாக உள்ளது.
- சித்திரை வீதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
- குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அனைத்து மாதங்களிலும் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் சித்திரை வீதிகளை சுற்றுவதும், பின்னர் இளைப்பாற அங்கு சிறிது நேரம் அமர்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதும் வழக்கம். இதனால் சித்திரை வீதிகளில் தினமும் மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் காணப்படும்.
ஆனால் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் குடிநீரை தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (23-ந்தேதி) தொடங்க உள்ளது. அன்றிலிருந்து தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடப்பதால் மீனாட்சி அம்மன் கோலில் பகுதி முழுவதும் விழாக்கோ லம் பூண்டு காணப்படும்.
விழா நடக்கும் அனைத்து நாட்களும் சுவாமி வீதி உலா உள்ளிட்டவைகளை பார்க்க உள்ளூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதனால் சித்திரை வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா நடக்கும் போது, பக்தர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவேண்டியது அவசியமானதாகும்.
தமிழகத்தின் முக்கிய கோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவில்களில் இருக்கும் வசதி கூட இங்கு இல்லை என்பது பக்தர்களின் புலம்பலாக இருக்கிறது.
தற்போது சித்திரை திருவிழா தொடங்க இருப்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். எனவே கோவில் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நான்கு சித்திரை வீதிகளிலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது.
- அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேவேந்திர வீதியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.உள்ளது. இதனை தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் இல்லாததால்ஏ.டி.எம்மில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் ஏ.டி.எம்மிற்குவரும் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிக்கு ள்ளா கினர்.மேலும் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனால் விளக்கை எரிய விட்டு ஏ.டி.எம்மில் பணம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருளை பயன்ப டுத்தி கொள்ளையர்கள் ஏ.டி.எம்.முக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக ஏ.டி.எம். உள்ளே மின் விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாண–விகள் படித்து வருகின்றனர்.
- சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 2 அரசு பள்ளிகள் உள்ளது.
இந்த இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் பள்ளி தொடங்கும் காலை மற்றும் முடியும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் கூறியதாவது:-
மதுக்கூரில் உள்ள 2 அரசு பள்ளிகளிலும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதோடு படிக்கட்டில் தொங்கியடி செல்லும் நிலையும் உள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் மதுக்கூர் காவலர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
- தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
- சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புற டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
சுவாமிமலை:
திருவைகாவூர் கொள்ளி டம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக சுவாமிமலை வழியாக வேதாரண்யம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதற்கான பணிகள் ஒரு சில இடங்களில் முடிவு பெற்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
இந்நிலையில், கும்பகோணம்- திருவை யாறு சாலையில் சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புறடயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
சுமார் 2 மணி நேரம் போராடி அந்த வாகனத்தை மீட்டனர்.
இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த கனரக லாரி ஒன்றும் மாட்டிக் கொண்டது.
இதனால் சாலையில் பள்ளம் பெரிய பள்ளமாக மாறி உள்ளது.
இதனை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.
போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்