search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awareness drive"

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழி வேல் இன்று துவக்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு, சக்கரபாணி உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை உடுமலை டிஎஸ்பி ஆர்.தேன்மொழி வேல் இன்று துவக்கி வைத்தார். உடுமலையில் இருந்து ஈரோடு வரையில் செல்லும் இந்த இளைஞர்கள் பொதுமக்களுக்கு வழிநெடுக விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கியபடி செல்கின்றனர்.காவல்துறை, தேஜஸ் ரோட்டரி, ரோட்ராக்ட் சங்கங்கள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தன. நிர்வாகிகள் எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு, சக்கரபாணி உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.

    ×