என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Awarness program"
- முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.
- இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையின் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி தானேஜா விண்வெளி மற்றும் விமான நிறுவன நிதியுதவியுடன் பிரவீன்குமார் தலைமையில் ஆராய்ச்சி மாணவரான அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை ஆரோக்கியமேரி பெர்னாதீஸ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வேதியியல் துறை தலைவர் கவிதா, பேராசிரியர்கள் செந்தில்குமார், லோக்கிருபாகர், கெழஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின்பேரில் பேராசிரியர்கள் லிங்கதுரை, மணிகண்டராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், சுகாதாரம் குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், ஸ்ரீனிவாசன் சேவை அறககட்டளை நிர்வாகி இசக்கிமுத்து ஆகியோர் சுகாதார குறித்தும், கைகழுவும் நிலை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியை செலினா பிரின்ஸ் நன்றி கூறினார்.
- தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் உள்ளிட்ட பலர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை தடை சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம், சமூக நலத்துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த சேவை மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மைய நிர்வாகி ஜெயராணி, ஒருங்கிணைந்த சேவை மையம் சகி, வழக்கு பணியாளர் பானுப்பிரியா, சமூக நல விரிவாக்க அலுவலர் வேலுத்துரைச்சி, ஊர் நல அலுவலர் முத்தாத்தாள் ஆகியோர் சட்டம் சார்ந்த, சேவை மையம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி கவுன்சிலர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்து லட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனக ஜோதி, முத்துமாரி மற்றும் அலு வலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார்.
- மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மையத்தில் ஜீரண மண்டலம் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் ஜீரண மண்டல நோய்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் அரவிந்த் பேசினார். உணவு முறைகள் மற்றும் அதற்கான யோகா பயிற்சிகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் மோகன ஸ்வேதா, விஜயலட்சுமி மற்றும் தாரணி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ- மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
- நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் தங்கப்பழம் , தாளாளர் முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- உடற்பருமன் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர் கவிதா உரையாற்றினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக கல்லூரி மையத்தில் உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் தங்கப்பழம் , தாளாளர் முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் வினுதா முன்னிலை வகித்தார். இதில் உடற்பருமன் பற்றியும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர் கவிதா உரையாற்றினார்.
உடற்பருமனுக்கான யோகா பயிற்சிகள், உணவு முறைகள் குறித்து மருத்துவ கல்லூரி மாணவிகள் லோகேஸ்வரி, அபிஸ்ரீவர்ஷினி மற்றும் சண்முகப்பிரியா ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். மேலும் மருத்துவ கல்லூரியின் மாணவ-மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
- தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதூர், சங்கரலிங்கபுரம் மற்றும் குரும்பூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாற்றத்தை தேடி என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தென்பாகம் போலீஸ் நிலை யத்தில் இளைஞர்களிடமும், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சோட்டையன் தோப்பு பகுதியில் இளைஞர்களிடமும், முத்தையாபுரம்போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் எம். தங்கம்மாள்புரம் பகுதி பொதுமக்களிடமும், குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் குரும்பூர் சாமிநகர் பகுதி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல் சங்கரலிங்க புரம் சப் -இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் சங்கரலிங்கபுரம் என். வேடப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும், புதூர் சப் -இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் புதூர் பஜார் பகுதியில் பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த 'மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.'நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும், குழந்தைகளையும், மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கு வோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார்.
- இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பிப்ரவரி 4-ந் தேதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தென்காசி கேன்சர் சென்டர் சார்பில் இலஞ்சி சவுக்கை மூக்கு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கினார். தென்காசி கேன்சர் சென்டர் இயக்கு னரும், அடையாறு கேன்சர் சென்டர் முன்னாள் தலைமை மருத்துவருமான அருணா சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டுனர்களிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த பான், குட்கா, புகையிலை, சிகரெட் ஆகிய பொருட்களை புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து வாங்கப்பட்டது.
மேலும் புற்று நோயால் ஒரு தனி நபரின் வாழ்க்கையும், அவரது குடும்பத்தின் நிலைமையும் எவ்வாறு பாதிப்படையும் என கூறப்பட்டது. வாகன ஓட்டுனர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி- சர்ட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தென்காசி கேன்சர் சென்டர் சார்பாக வழங்கப்பட்டது.
அனைத்து வாகன ஓட்டு னர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில் தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவசந்திரன், தென்காசி மெடிக்கல் சென்டர் இயக்குனர் பாரதிராஜா, பொது மேலாளர் அகமது பாத்திமா, ஆகாஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் மாரியப்பன், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் முத்தையா பாண்டியன், அ.ம.மு.க. பிரமுகர் சுப்பிரமணியன் என்ற சுப்பு பாண்டியன், இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் , ஆசிரியர்கள் சுரேஷ் ,சங்கர், என்.சி.சி. ஆசிரியர் செந்தில் பாபு , என்.எஸ்.எஸ். ஆசிரியர் குத்தாலம் மற்றும் குற்றாலம் காவல்துறை, தென்காசி போக்குவரத்து துறை, காவல் துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனை மருத்து வர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியையும், அறிவுக்கூர்மையையும் அதிகப்படுத்தும்.
திருப்பூர் :
தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்கள் பேசுகையில் , தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் , ஒரு குழந்தை பிறந்த ஒருமணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலமாக சிறந்த ஊட்டச்சத்து கிடைப்பதால் , நோய் எதிர்ப்புச் சக்தியையும், அறிவுக்கூர்மைையயும் அதிகப்படுத்தும்.
தாய்ப்பாலில் கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் -ஏ நிறைந்துள்ளது, தாய்ப்பாலில் உள்ள வெள்ளையணுக்கள் வயிற்றுப்போக்கு , மஞ்சள் காமாலை போன்ற நோய் தொற்றுக்களைத் தடுக்கிறது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய முதல் உணவு. குழந்தைகளுக்கு உடல் பருமனாக உதவும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சுவாச நோய் தொற்றுக்களை தடுக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தாய்மார்கள் பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம். தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் . மன உளைச்சல் இருந்தால் பால் சுரப்பது குறைந்து விடும் என்றனர். நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் சுந்தரம், அஜித், ஜீவானந்தம், சந்தியா, ரேஷ்மா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தமிழகம் என்ற முழு சுகாதாரத் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே கோடங்கிபாளையம் ஊராட்சியில் எழில்மிகு கிராமங்களை நோக்கி தமிழகம் என்ற முழு சுகாதாரத் திட்டத்தின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி பழனிச்சாமி தலைமை வகித்தார். பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் இந்த முழு சுகாதாரத் திட்டம் குறித்து விளக்கி கூறினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்