என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Baba Ramdev"
- ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.
- இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்
அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.
நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
Crores are dying after consuming poisonous allopathic medicines: Ramdev's fresh tirade against allopathy. pic.twitter.com/RAvgyg7Wrc
— Piyush Rai (@Benarasiyaa) August 15, 2024
- பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
- இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியது
ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.
இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணைகளில் அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, பதஞ்சலி நிறுவனம் தனது தவறான விளம்பரங்களுக்காகப் பிரதான பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி பத்திரிகைகளில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அந்த மன்னிப்பு விளம்பரங்கள் சிறிய அளவில் மட்டுமே இருந்ததாக இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் அதிருப்தி எழுந்தது. இருப்பினும், இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியதைஅடுத்து, அந்த உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.
- ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
- அனைவரும் தினமும் யோகா பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுடன் யோகா குரு ராம்தேவ் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
இதையடுத்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில்,
யோகா என்பது சமூகத்தின் அனைத்து நோய்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு. அனைவரும் தினமும் யோகா பயிற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் யோகா முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறினார்.
#WATCH | Haridwar: Yoga Guru Baba Ramdev says, "Yoga is the cure for all diseases and problems of society...I urge everyone to practise Yoga daily...In the past 10 years, Yoga has made progress..." https://t.co/YVazbHAwnu pic.twitter.com/bX0uGpRsy3
— ANI (@ANI) June 21, 2024
- பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
- விளம்பரம் வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்தது.
புதுடெல்லி:
பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதிலளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆசார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, ஆசார்யா பாலகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதியளிக்கிறது என தெரிவித்தார். அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
அதன்பின், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
- பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
- தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.
இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.
தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
- சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கைக்கு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.
நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இந்த தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அலோபதி மருந்துகளைக் குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இதுபோன்ற தவறான விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய மீறலை சுப்ரீம் கோர்ட் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும். தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு தயாரிப்புக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்தது சுப்ரீம் கோர்ட். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதஞ்சலி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி பிரசாரம் செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க உள்ளோம். நாங்கள் தவறான செய்திகளை பரப்பினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் அளியுங்கள். மரண தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
ஆயுர்வேத மருந்துகளுக்கு எதிரான பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராம்தேவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
- விளக்கம் அளித்து மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு ராம்தேவ் கடிதம் எழுதியுள்ளார்.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், 'பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்… அதேபோல் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்' என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தபோது, ராம்தேவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராம்தேவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ராம்தேவிடம் விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணைய தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ராம்தேவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து, மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மேம்படுத்துவதற்காகவும் உழைத்து வருகிறேன். பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ முழுமையானது இல்லை. இருப்பினும், எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத்தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், கேடர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யோகாசன முகாமில் பங்கேற்ற பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ராமருக்கு கோவில் கட்டுவது நமது நாட்டுக்கான பெருமிதம். அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அயோத்தியில் இல்லாவிட்டால் வேறெங்கு ராமருக்கு கோவில் கட்ட முடியும்?. மெக்காவிலோ, மதினாவிலோ, வாடிகன் நகரிலோ நிச்சயமாக நம்மால் ராமருக்கு கோவில் கட்டவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். #RamTemple #BabaRamdev
யோகா குரு பாபா ராம்தேவ் பற்றி ‘காட்மேன் பிரம் டைகூன்’ (தொழில் அதிபராக இருந்து சாமியார் ஆனவர்) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதில் பாபா ராம்தேவுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அவற்றை நீக்கும்வரையில், அந்த புத்தகத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனால் நீக்கப்படாத பகுதிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ இணைப்பாக (லிங்க்) வெளியானதாக தெரிகிறது.
இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில் பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் நய்யார் நேற்று முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ‘காட்மேன் பிரம் டைகூன்’ புத்தகத்தின் நீக்கப்படாத பகுதிகளை பார்க்க உதவும் வீடியோ இணைப்பை நீக்க வேண்டும் என்று பேஸ்புக், கூகுள், யுடியூப், டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிபதி பிரதிபா சிங் உத்தரவிட்டார்.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் குஜராத் மாநிலத்தில் முதலாவது பதஞ்சலி அங்காடியை ஆமதாபாத்தில் நேற்று திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாமாகவே கோவிலை கட்டிமுடிப்பது. மற்றொன்று ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தில் இதற்கென தனி சட்டத்தை இயற்றி நிறைவேற்றி அரசு கோவிலை கட்டுவது.
ஒருவேளை மக்களே கோவிலை கட்டினால் அது கோர்ட்டு மற்றும் சட்டத்தை அவமதிப்பதாகும். ஆனால் கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த விவகாரத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை இழக்கும். #BabaRamdev #AyodhyaTemple #BJP
பிரபல யோகாசன குருவும், பதாஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபருமான பாபா ராம்தேவின் வாழ்க்கையை சித்தரித்து ‘ஆன்மிகவாதியில் இருந்து தொழிலதிபர் வரை’ (Godman To Tycoon) என்ற புத்தகத்தை ஜுகர்நாட் புக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இவ்வழக்கின் முதல் பிரதிவாதியான பாபா ராம்தேவின் கருத்தை அறிய அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மறுவிசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். #SCnotice #BabaRamdev #HCorder
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்