என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "babri masjid demolition"
- ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி, பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது
- இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன்.
அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர்.
நான் சொல்வதெல்லாம் இதுதான், பிரிந்து கிடந்தால் தனித்தனியாக இருப்பீர்கள், ஒற்றுமையாக இருந்தால் எந்த தாய்க்கு பிறந்தவனாலும் உங்களின் தலை முடியைக் கூட அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்து விஷ்வ பரிஷத் உள்ளிட்ட தீவிர வலதுசாரி இந்துத்துவ இயக்கத்தினரால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.1800 கோடி செலவில் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
- ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரம் ஆகிய பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.
அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் 8வது அத்தியாயத்தில், ராம ஜென்மபூமி இயக்கம் தொடர்பாக பகுதியில் பாபர் மசூதி இடிப்பு, பாஜகவின் எழுச்சி, இந்துத்துவா அரசியல் பற்றிய குறிப்புகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என கொடுக்கப்பட்ட தீர்ப்பில் இருந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி கூறியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, 1990-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன், 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பான பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மதச்சார்பின்மை" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில் "2002 இல் குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின்பு 1,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவற்றில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்ற வாக்கியம், 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது 1,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்" என மாற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகள்" என்ற தலைப்பில் மற்றொரு அத்தியாயத்தில், குஜராத் கலவரங்கள் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன
இந்தப் புதிய மாற்றங்களை 2024- 25 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த என்.சி.இ.ஆர்.டி திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்