என் மலர்
நீங்கள் தேடியது "Bajrang Punia"
- பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.
வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூசன் சரண்சிங் உள்ளார்.
இவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போதிலும் அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில் மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று பாராளுமன்ற கட்டிடம் முன்பு போராட்டம் நடத்த ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர்.
தடுப்புகளை அகற்றி விட்டு வீரர், வீராங்கனைகள் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வீராங்கனைகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பஜ்ரங்புனியா, வினேஷ் போகட், அவரது சகோதரி சங்கீதா போகட், சாக்ஷி மாலிக் ஆகிய பிரபல மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதில் வினேஷ் போகட்டை மற்றும் விடுவித்தனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர். புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு எதிரே போராட்டத்துக்காக புறப்பட்ட அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 109 போராட்டக்காரர்கள் உள்பட 700 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
One of 2 defining videos of the day. Haunting. Hurting. Angering. Avoidable. Tragic. #WrestlerProtest pic.twitter.com/T3lqaC8uOv
— Rajdeep Sardesai (@sardesairajdeep) May 28, 2023
இந்த நிலையில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், சங்கீதா போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலவரத்தை ஏற்படுத்துதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள்.
பஜ்ரங் புனியா 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார். மேலும் ஆசி விளையாட்டு, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று முத்திரை பதித்துள்ளார்.
30 வயதான சாக்ஷி மாலிக் 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றார். காமன் வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று இருந்தார். 28 வயதான வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முத்திரை பதித்துள்ளார். சங்கீதா போகத் தேசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பிறகு ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கி இருந்த கூடாரத்தை டெல்லி போலீசார் முற்றிலும் அகற்றினர். கட்டில், மெத்தை, மின் விசிறி, ஏர்கூலர், தார்பாய்களை ஆகியவற்றை அங்கிருந்து அகற்றினர்.
சில மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தருக்கு திரும்பினார்கள். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மல்யுத்த வீரர், வீராங்களைகள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினரும், விளை யாட்டு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
- இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.
புதுடெல்லி:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி இந்த தகுதி தேர்வு போட்டியை நடத்துகிறது.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா (65 கிலோ), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இருவரும் ஆசிய விளையாட்டுக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாலிக் மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், "குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்" என காட்டமாக பதிவிட்டார்.
பஜ்ரங் புன்யாவை தொடர்ந்து, மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும் தடகள வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விரேந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "எனது சகோதரியும், நாட்டின் மகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன். உங்கள் மகள் மற்றும் எனது சகோதரி சாக்ஷி மாலிக்கைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். ஆனால், தங்களின் முடிவையும் முன்வைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி வீரர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
- பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவர் பிரதமருக்கு திருப்பி அளித்தார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோல், 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார்.

இந்நிலையில், அரியானாவில் உள்ள மல்யுத்த வீரரான வீரேந்தர் ஆர்யா அகாரா வீட்டுக்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.
அங்கிருந்த மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு மல்யுத்தம் செய்வது குறித்து பஜ்ரங் புனியா பயிற்சி அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
- இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.
- டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
- இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடியவர்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா.
இவர், இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்.
- இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- பஜ்ரங் புனியாவுக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா, ஊக்கமருந்து தடை விதியை மீறியதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு இடைநீக்கம் செய்யப்பட்டு, பிறகு ஒழுங்குமுறை குழுவால் திரும்பப் பெறப்பட்டது.
ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மீண்டும் அவரை இடைநீக்கம் செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
- இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்
இந்நிலையில், வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வினேஷ் போகத் , பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்
- வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.
ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.

முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.

- வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்தது.
- உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள்.
வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் நுழைந்த அவரது பதக்க கனவு கலைந்தது.

இதுகுறித்து சக மல்யுத்த வீரரும், டோக்கியோ ஒலிம் பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவருமான பஜ்ரங் புனியா கூறியதாவது:-
இந்த இருளில் உங்கள் (வினேஷ் போகத்) பதக்கம் பறிக்கப்பட்டதாக நான் நம்புகிறேன். நீங்கள் இன்று உலகம் முழுவதும் வைரம் போல் பிரகாசிக்கிறீர்கள். உலக சாம்பியன் இந்தியாவின் பெருமை. நீங்கள் நாட்டின் கோஹினூர் வைரம். பதக்கம் வாங்க விரும்புபவர்கள் அவற்றை ஒவ்வொன்றையும் ரூ.15-க்கு வாங்கலாம்.
இவ்வாறு பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக போராட்டத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தனது ரெயில்வே பணியை வினேஷ் போகத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி:
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை இன்று ராஜினாமா செய்த வினேஷ் போகத், வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தெரிவித்தார்.