search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balabishekam"

    • 3 சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர மூலஸ்தானத்தில் எழுந்தருளி காட்சி அளிப்பர்.
    • 3 சக்கரத்தாழ்வார்களும் சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள இராஜகோபால சுவாமி கோவிலில் மூலவராக விஜய வல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார்.

    தஞ்சை சுற்றுவட்டாரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

    இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர மூலஸ்தானத்தில் எழுந்தருளி காட்சி காட்சி தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனை தரிசிக்க முன்ஜென்ம கர்மவினைகளும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை ஆடி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களும் சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்த சிறப்பு அலங்காரமும் தீபாராதனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து முப்பெரும் தேவியர்களாக திகழும் மிகவும் பிரசித்தி பெற்ற உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன், கோலாலம்பூர் மகாலெட்சுமி, சிவ துர்க்கை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அனுமன் ஜெயந்தி, தீபா வளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அதன்படி, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ×