என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Balakrishna"
- சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலய்யா தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பல் வித் NBK 2 என்ற நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் கங்குவா படக்குழு கலந்துக்கொண்டனர்.
அதில் சூர்யாவிடம் நகைச்சுவையாக பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சூர்யா நடித்த வெற்றி படமாக அமைந்த கஜினி திரைப்படத்தில் இடம்பெற்ற சுற்றும் விழி சுடரே பாட்டுக்கு பாலய்யாவுடன் சூர்யா சேர்ந்து நடனம் ஆடினார் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
- இதுவரை 100 படங்களுக்கு மேல் பாலய்யா நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கு மேல் பாலய்யா நடித்துள்ளார்.
சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலய்யாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ஆக்ஷன் கிங்! கலெக்ஷன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்புச் சகோதரர் பாலய்யா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Action King!Collection King!Dialogue Delivery King! My lovely brother Balayya has completed 50yrs in the cinema industry and still going strong. A great achievement! My hearty congratulations to him and I wish him peace of mind, good health and happiness all his life. God Bless.
— Rajinikanth (@rajinikanth) September 1, 2024
- ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம்
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வந்தது.
படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வந்தனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரியளவில் வைரலாகி வந்தது. பகத் ஃபாசிலின் கதாப்பாத்திரமான ரங்கன் சேட்டா குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவரப்பட்டது.
தற்பொழுது இந்த படத்தை தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் சூப்பர் ஸ்டாரான பாலய்யா , ரங்கன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியைடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலகிருஷ்ணா தற்பொழுது அவரது 109 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் பால கிருஷ்ணாவை நேட்சுரல் பார்ன் ஸ்டார் என்ற பெயரை கொடுத்துள்ளனர். மிகப் பெரிய பில்டப் காட்சிகளுடன் பாலகிருஷ்ணாவின் அறிமுக காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபல இந்தி நடிகரான பாபி டியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
- ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு கூலி படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
- நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம்.
தெலுங்கு திரையுலகில் உருவாகும் புதிய படம், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி." இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஷ்வாக் சென் மற்றும் அஞ்சலி ஜோடி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜூ ரமணா, ஆயிஷா கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இன்று (மே 31) வெளியானது. இதையொட்டி, இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவுடன், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளி நிற்க கூறும் போது, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. வீடியோவின் படி பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிடுவதும், அதனை அவர் சகஜமாக எடுத்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான பதிவில், "கேங்ஸ் ஆஃப் கோதாவரி பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியை தனது வருகையால் சிறப்பாக மாற்றிய பாலாகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."
"எனக்கும் பாலாகிருஷ்ணா அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் இருவருக்கும் இருவர்மீதும் நல்ல மரியாதை உள்ளது. நீண்ட காலமாக எங்களிடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. அவருடன் மீண்டும் மேடையை பகிர்வது அருமையாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர்.
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் 'கேங்ஸ் ஆஃப் கோதவரி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ண சைதன்யா இயக்கி உள்ளார். கதாநாயகனாக விஷ்வாக் சென் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் நேகா செட்டி, சாய் குமார், நாசர், கோபராஜு ரமணா, ஆயிஷா கான் உள்பட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை அஞ்சலியும் மற்றவர்களும் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கின்றனர்.
வீடியோவில், நிகழ்ச்சி மேடையில் அனைவரும் நின்றிருக்க அஞ்சலியை நோக்கி கையை நீட்டும் பாலகிருஷ்ணா தள்ளி நிற்கும்படி கூறுகிறார். இதை கவனிக்காத அஞ்சலியின் தோளை பிடித்து பின்னோக்கி தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி 2 அடி பின்னால் சென்று நின்றார். அதிர்ஷ்டவசமாக அவர் கீழே விழவில்லை.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Appalling behaviour by Balakrishna and an understandable reaction by the junior artist who laughed it off, but the most horrifying part of this video is the crowd's reaction to a blatant act of assault, cheering and hooting in approval.
— Siddharth (@DearthOfSid) May 29, 2024
pic.twitter.com/kVO1UgYsP1
- கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
- தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.
விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.
2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.
கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
- 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாக பேசினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சட்டசபைக்கு வந்த அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்டப் பேரவையில் மதிக்கவில்லை என்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் சட்டசபை, சபாநாயகர் மற்றும் சட்டங்களை மதிக்கிறோம்.
தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்.
சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததற்கான உறுதியான ஆதாரங்களை சி.ஐ.டி. கண்டுபிடித்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம். 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா ஓட்டு போட்ட மக்களுக்காக சட்டசபையில் இதுவரை எதையும் பேசவில்லை. பெண்களை இழிவாக பேசுவது அவரது வழக்கம்.
மைத்துனர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற சட்டமன்றத்தில் சத்தமாக கூச்சலிட்டபடி அழுகிறார். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சித்தரிக்க பார்க்கின்றனர்.
சந்திரபாபு நாயுடு மீது சட்ட விரோத வழக்கு இருந்தால் விவாதம் நடத்த வேண்டும்.
சட்டசபையில் முறைபடி விவாதம் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து சைக்கோக்கள் போல் கத்தி சபாநாயகர் மீது பாட்டில் வீசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் எம்.எல்.ஏ.வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர சட்டசபை இன்று கூடியபோது சட்டசபைக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை அருகில் சென்று பேப்பர்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சபாநாயகர் மீது வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல நடிகரும் தெலுங்கு தேசம் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான நடிகர் பாலகிருஷ்ணா எழுந்து நின்று தொடையை தட்டி மீசையை முறுக்கியபடி ஆவேசமாக பேசினார்.
ஆதாரம் இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்து இருக்கிறீர்கள்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபைக்கு வந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும் என பேசினார்.
இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எதிர் கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம் பாபு எழுந்து இதுபோன்ற செயல்களை சினிமா நடிப்பதில் வைத்துக்கொள்ளுங்கள்.
சட்டசபைக்குள் இது போன்று நடந்து கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.
இதற்கு நடிகர் பாலகிருஷ்ணா தில் இருந்தால் இந்த பக்கம் வா என ஆவேசமாக கத்தினார். அதற்கு அம்பதி ராம்பாபு உனக்கு தில் இருந்தால் இந்த பக்கம் வா என மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா.
- இந்துபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பாலகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவது இல்லை என்று புகார் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது. யாரோ தூண்டுதலின் பேரில் பாலகிருஷ்ணா மீது புகார் அளித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்