search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana plantation"

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
    • மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவர் அங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூரில் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அஙகு இவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்தன. அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. அதன்பிறகு வாழைத்தார்களை மட்டும் பிடுங்கி ருசித்து விட்டு காட்டுக்குள் சென்றன.

    திருநாவுக்கரசு இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாழைத்தார்களை மட்டும் யானைகள் ருசித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இது திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அடர்வனத்தில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில், ஏற்கனவே வெட்டப்பட்டு உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள மின்வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இதற்கிடையே சிறுமுகை லிங்காபுரத்தில் பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி லிங்காபுரம் சாலையோரத்தில் முகாமிட்டது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிறுமுகை, லிங்காபுரத்தில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. அதன்பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • வாழைத்தோட்டத்தில் பிணமாக முதியவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த ஏழூர் வேட்டுவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (82). இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு அம்மாசை குட்டி (54) என்ற மகன் உள்ளார். மகனுக்கு திருமணமான நிலையில் ராமசாமி கவுண்டர் வேட்டுவன் புதூர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் ராமசாமி கவுண்டரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அம்மாசை குட்டி டி.என்.பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் விட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமசாமி கவுண்டரை காணவில்லை. இதனையடுத்து அம்மாசை குட்டி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராமசாமி கவுண்டரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிரானைட்க்கு பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் இறந்த நிலையில் பிணமாக முதியவர் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடப்பது காணாமல் போன ராமசாமி கவுண்டர் என்பதை உறுதி செய்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதனையடுத்து ராமசாமி கவுண்டரின் உடலை மீட்ட போலீசார் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமசாமி கவுண்டர் அருகிலுள்ள அந்த வாழைத்தோட்டத்திற்கு எதற்கு வந்தார்? மயங்கி விழுந்து இறந்தார? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணத்தில் பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர்.
    • வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூரா–ட்சி–க்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி அடந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், பவானிசாகர் நீர் தேக்க பகுதியாக உள்ளதாலும் அதிகளவில் யானைகள் நடமாட்டம் உள்ளது.

    மேலும் இப்பகுதியில் நீரோட்டம் அதிகளவில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு வருகின்றனர். இதனிடையே லிங்காபுரம் வனத்துறை சோதனை சாவடிக்கு அருகே உள்ள செந்தில், புஷ்பா ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் அதிகாலை நேரத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்தது.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரையும் காட்டு யானை தாக்க முயன்றது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓட முயற்சித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இருப்பினும் எழுந்து சென்று ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே யானை அங்கு வாழைத்தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருந்த கொட்டகையை காட்டுயானை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×