என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BANvSL"

    • கமிந்து மெண்டிஸ் முதல் இன்னிங்சில் 102 ரன்கள் விளாசினார்.
    • 2-வது இன்னிங்சில் 164 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இலங்கை- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 2-வது இன்னிங்சிலும் சதம் விளாசினார்.

    முதல் இன்னிங்சில் 7-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் 102 ரன்கள் விளாசினார். தனஞ்ஜெயா டி சில்வா உடன் சேர்ந்து 202 ரன்கள் சேர்த்தார். தனஞ்ஜெயா டி சில்வாவும் (102) சதம் விளாசினார்.

    2-வது இன்னிங்சில் மீண்டும் தனஞ்ஜெயா டி சில்வா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த முறை 8-வது வீரராக களம் இறங்கிய 164 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்சிலும் தனஞ்ஜெயா டி சில்வா (108) சதம் விளாசினார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 7-வது அல்லது அதற்கும் கீழ் வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் கண்ட முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    மேலும் தனஞ்ஜெயா டி சில்வா- கமிந்து மெண்டிஸ் ஆகிய இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 3-வது ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கிரோக் சேப்பல்- கிரேக் சேப்பல், மிஸ்பா-உல்-ஹக்- அசார் அலி ஜோடி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    சில்ஹெட்:

    வங்காளதேசம் -இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 280 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்சயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 188 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னண்டோ 4 விக்கெட்டுகளும், கசூன் ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    பின்னர் 92 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 418 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 164 ரன்னும், டி சில்வா 108 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 182 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 328 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 87 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கசுன் ரஜிதா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    • திமுத் கருணாரத்னே 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • குசால் மெண்டிஸ் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    வங்காளதேசம்- இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் இன்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    நிஷான் மதுஷ்கா- திமுத் கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த மதுஷ்கா 57 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதத்தை சதமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுத் கருணாரத்னே 86 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 93 ரன்னிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

    அடுத்து வந்த மேத்யூஸ் 23 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் சண்டிமல் உடன் தனஞ்ஜெயா டி செல்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இலங்கை அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமல் 34 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசத்தின் அறிமுக வீரர் ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.
    • இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உள்பட 6 பேர் அரை சதமடித்தனர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஜெயசூர்யா, மெண்டீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் ஆகியோர் களம் இறங்கினர். 24 ரன்னில் மஹ்முதுல் ஹசன் ஜாய்-ம் 19 ரன்னில் ஜாகிர் ஹசனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 20 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து மொமினுல் ஹக்- ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். அரை சதம் விளாசிய கையோடு அவர் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ஷகிப் அல் ஹசன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிண்டன் தாஸ் 38 ரன்னிலும் ஷஹாதத் ஹொசைன் திபு 15 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனையடுத்து மெஹிதி ஹசன் மிராஸ்- தைஜுல் இஸ்லாம் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இதனால் 4-ம் நாள் முடிவில் வங்களாதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்திருந்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஜெயசூர்யா, மெண்டீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்காளதேசம் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 157 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து, 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.

    அந்த அணியின் மொமினுல் ஹக் அரை சதம் விளாசி அவுட் ஆனார். லிட்டன் தாஸ் 38 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்துள்ளார்.

    இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றார்.

    • நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
    • களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்

    நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

     ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

     இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    • வங்காளதேச வீரர்கள் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • வீரர் நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியும் வெற்றி பெற முடியாமல் இலங்கை ஏமாற்றம்.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது. குசால் மெண்டிஸ் (10), கமிந்து மெண்டிஸ் (4), ஹசரங்கா (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    இலங்கை அணி ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது வங்காளதேசத்திடம் தோல்வியடைந்தால் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.

    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் டக் அவுட்டாகினர். கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணி 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர்.

    முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நேற்றைய போட்டியில் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
    இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.

    முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . பின்னர் 
    இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், ஆஷா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக ஒஷாடா பெர்னான்டோ, கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஒஷாடா பெர்னான்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அரைசதம் அடித்தார்.

    இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கையின் அசிதா பெர்னாண்டோ இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    மிர்புர்:

    இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம்.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில்  365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . 
    லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார்.

    இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 506 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 145 ரன்னும், சண்டிமால் 124 ரன்னும், கருணரத்னே 80 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஹொசைன் 4 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 169 ரன்னில் ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 58 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 6 விக்கெட், ரஜித 2விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இலங்கை அணி 3 ஓவரில் வெற்றிக்கு தேவையான 29 ரன்களை எடுத்தது. அத்துடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
    ×