என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "barricades"

    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ஏற்பாடு
    • தண்டவாளத்தின் கீழ்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை புறநகர் பகுதியான மதுக்கரை கேரளா -தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக கேரளா- தமிழகத்தை இணைக்கும் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

    மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தண்டவாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரெயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானைகள் எளிதாக கடந்து செல்கின்றன.

    இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்றொரு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றது. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது.

    ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.

    எனவே புதிதாக மேலும் தடுப்புகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். தமிழக அரசின் உத்தரவு வந்த உடன் நிதி ஒதுக்கப்பட்டதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • பாராளுமன்றம் நோக்கி ‘டெல்லி சலோ’ பேரணி செல்ல உள்ளனர்.
    • இன்று மதியம் 1 மணிக்கு பேரணி செல்ல உள்ளனர்.

    புதுடெல்லி:

    சம்யுக்தா கிசான் மோட்சா மற்றும் மஸ்தூர் கிசான் மோட்சா விவசாய சங்கம் தலைமையில் பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கி 'டெல்லி சலோ' பேரணி செல்ல உள்ளனர்.

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதிசெய்யவும், மின்சார மானியம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு விவசாயிகள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு நியாயம் வழங்க வலியுறுத்தியும் ஜத்தா பகுதி பஞ்சாப் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி இன்று மதியம் 1 மணிக்கு பேரணி செல்ல உள்ளனர்.

    இதற்காக இன்று காலை முதல் திரண்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் கடுமையான நெரிசல் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி போலீசார் விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

    டெல்லியில் பாதுகாப்பை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்துள்ளனர். விவசாயிகள் திரண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    ஹரியானா மாவட்ட போலீசாரும் இப்பேரணிக்கு அனுமதி வழங்காத நிலையில் விவசாயிகள் பேரணி செல்ல இருப்பதால், அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    டெல்லிக்கு வரும் விவசாயிகளை அங்கேயே தடுத்து நிறுத்த போலீசார் வியூகங்கள் வகுத்து வருகின்றனர்.

    விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்வதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.

    100 விவசாயிகள் கொண்ட குழு டெல்லியை நோக்கி அமைதியான முறையில் செல்ல உள்ளது. தடுப்புகளை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. டெல்லி நோக்கி சென்று அமைதியான போராட்டம் நடத்த அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறோம்.

    விவசாயிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பேச விரும்பினால் மத்திய அரசின் கடிதத்தையோ அல்லது ஹரியானா, பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகத்தையோ காட்டுங்கள்... நாங்கள் வருகிறோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

    ×