என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Basic amenities"
- நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவாக கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை ஸ்திரத்தன்மையுடன் நிறுவிக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு வலுவடைத்திருந்தாலும் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் வரும் நிலையில் வெயிலின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில், வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.
இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார்.
- மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள்.
புதுச்சேரி:
சாலை, தெருவிளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை, வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும். என, நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த நிரவி-திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கணல், இது குறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நிரவி கொம்யூன் மானாம் பேட்டை கிராமத் தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக வழங்கப்படுகிற தண்ணீரை, கலெக்டராகிய நீங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வுக்கு உட்படுத்துங்கள். மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள். மானாம் பேட்டை வடக்கு தெரு இருளில் கிடக்கிறது.
எனவே, சாலை, தெரு விளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவைகளை 50 கிராமங்களில் இருந்து முதல் கட்டமாக 200 பேர், மேற்கண்ட அனைத்து அரசு ஆவணங்களையும், வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
- ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார்.
உதவியாளர் மாணிக்க ராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கவுன்சிலர்கள் ராமசாமி, பழனியப்பன், கலைமாமணி ஆகியோர் பேசியதாவது:-
வேலங்குடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கடங்கண்மாய் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கவுன்சிலர்களின் பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் சேர்மன் ஆகியோர் உறுதி கூறினர்.
- ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது.
- குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் ஆண்டிபாளையம், கண்ணன் காட்டேஜ் 60-வது வார்டு பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது. நாங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை.குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. தெருவில் கொசுத் தொல்லைகளும் உள்ளது.அவரவர் வீட்டின் முன்பு குழி தோண்டி தண்ணீரை பெருக்க வேண்டிய சூழ்நிலைஉள்ளது. இந்த தண்ணீர் குழியில் பெருகி ரோடுகளில் செல்கிறது.குழந்தைகள் அதில் மிதித்து தான் நடக்க வேண்டியுள்ளது. இதனால் டெங்குகாய்ச்சல் அதிகமாக வருகிறது. சிக்கன்குனியா பெரியவர்களுக்கு வருகிறது.
மேலும் குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது. மாநகராட்சிக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மனுவும் கொடுத்துஉள்ளோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
- டி. புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளது. இப்பள்ளி 2010ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உய ர்த்தப்பட்டு தற்போது 310 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பள்ளியில் சுற்று மதில் சுவர் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, செய்துதரக்கோரியும் பள்ளியில் குப்பை கொட்டுவதாகவும் பள்ளியை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ளதாகவும் பள்ளியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பள்ளி வழியாக ஆடு, மாடுகள், டிராக்டர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்வழியாக செல்வதால் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பதற்கு இடையூறுகள் உள்ளதாக கூறி கிராம பொதுமக்கள் உயர்நிலைப் பள்ளியின் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதா வது:- கடந்த வருடம் ஜூன் மாதம் 6-ந்தேதி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை மூலம் பள்ளிக்கு சுற்று மதில் சுவர் கட்டுவதற்காக ரூ.22லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுநாள் வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட கலெக்டர் சுற்று மதில் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பள்ளியில் குடிநீர் வசதி கழிவறை வசதி குப்பைகளை அகற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார்பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மேல் அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்