என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bathroom"
- வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
- நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது
இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குளியலறையில் வைக்கும் வாலி நீல நிறமாக இருக்க வேண்டும். அந்த வாலி அழுக்கு மற்றும் பாசி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்கோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. வீட்டின் குளியலறையில் இருக்கும் பாத்திரம் நீலம் நிறமாக இருந்தால் வீட்டில் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.
கடன் பிரச்சனையை சரிசெய்வது எப்படி?
உங்களுக்கு கடன் தொல்லைகள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன் நீல நிற வாலியில் தண்ணீர் பிடித்து வையுங்கள். பிடித்து வைத்த தண்ணீரை கொண்டு காலையில் குளிக்கும் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அந்த தண்ணீரில் சுத்தம் மட்டும் தான் செய்ய வேண்டும். குளிக்க கூடாது. குளியலறையில் பிடித்த தண்ணீரை மூடாமல் வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
இதேபோல் நாம் அன்றாடம் சமைக்கும் பாத்திரங்கள் வேலைபளு காரணமாக கழுவாமல் அப்படியே வைத்து விடுவேம் இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பண பிரச்சனை அதிகரிக்கும். இரவு எந்த வேலை எப்படி இருந்தாலும் இரவே உணவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்திடுங்கள், அழுக்கோடு வைத்து காலையில் எழுந்து கழுவினால் பண பிரச்சனையும், தெய்வ அருளும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்காமல் போகும்.
ஆகவே நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நாமே காரணமாக இருக்க கூடாது ஆகவே மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுங்கள்.
- தஞ்சை மாநகராட்சி கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.
- மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டு கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் 15-வது நிதி குழு மானிய நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர்களுக்கு 4 கழிவறை, 1 குளியறை கட்டப்பட்டன.
இது தவிர ரூ.5 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய போர்வெல் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று மகளிர் சமுதாய கழிப்பிடக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலை வகித்தார்.மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு மகளிர் சமுதாய கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த வார்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் .
இந்த பகுதி சௌராஷ்டிரா மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்களின் கோரிக்கையான பெயர் பலகையை தமிழ் மற்றும் சௌராஷ்டிரா மொழியில் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனை ஒப்புதலுக்காக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒப்புதல் வந்த பிறகு கண்டிப்பாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் ரம்யா, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
- இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (57). இவரது மகன் சிவன். அப்புசாமி மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு பாறை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்புசாமி விபத்தில் சிக்கி அவரது பார்வை பறிபோனது.
இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவர் வீட்டின் பாத்ரூமுக்கு சென்றார்.
- அப்போது திடீரென நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கூட்டுறவு காலனி பிரகதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 65). ஓய்வு பெற்ற பதிவுத்துறை உதவி அலுவலர். சம்பவத்தன்று இவர் வீட்டின் பாத்ரூமுக்கு சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி உதய ராணி தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (24). இவர் கர்ப்பம் அடைந்திருந்தார்.
பிரசவத்துக்காக சுதாவை உறவினர்கள் கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து இருந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.
அதைத்தொடர்ந்து சுதா பிரசவத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுதா பிரசவ வலியால் துடித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சுதா சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவரையும், குழந்தையையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.
இதற்கிடையே சுதாவின் உறவினர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அலட்சியம் காரணமாகத்தான் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JipmerHospital
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்