என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BCCI"

    • இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
    • பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,

    இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்றார்.

    • இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
    • ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


    இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

    • இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
    • கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

    பெர்த்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணி மட்டுமே 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக விராட் கோலி செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.

    இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.

    விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது. அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.

    இந்திய அணி தனது அடுத்த போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பெர்த் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதிலும் விராட் கோலியின் இன்னிங்ஸ் தான் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    வெலிங்டன்:

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.

    இந்த நிலையில் வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதால் மழை நின்ற பின் ஆட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நீக்கப்பட்டது.

    மும்பை:

    8-வது உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.

    இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக் குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக உத்தரவிட்டது.

    ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேர்வுக்குழுவில் தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    • ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
    • டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

    இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.

    • அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
    • இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.

    அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.

    இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும்.
    • அதில் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) தனது கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சிஏசி) நியமித்துள்ளது. அதில் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு புதிய தேர்வுக்குழுவை தேர்வு செய்யும். கடந்த மாதம் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு சேத்தன் சர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவையும் பிசிசிஐ நீக்கியது.

    • ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
    • டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், விளையாடிய கடைசி 10 போட்டியில் ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லை. இதில் 5 போட்டியில் ரிஷப் பண்ட் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினார். எனினும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில், வங்கதேச தொடரிலிருந்து ரிஷப் பண்ட் அதிரயாக நீக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்யும் பொறுப்பை கேஎல் ராகுல் பார்த்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இது குறித்து பிசிசிஐ, ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருவதால், மருத்துவக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதை சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். பிசிசிஐ காசில் ரிஷப் பண்ட்க்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளனர். இதே போன்று மற்றொரு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல், முதல் ஒருநாள் போட்டியில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ, அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

    • 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
    • சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

    2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

    3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .

    நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

    2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்

    3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .

    • சூர்யகுமார் யாதவ் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.
    • சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி 'ஏ பிளஸ்' பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, 'ஏ' பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, 'பி' பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, 'சி' பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.

    அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21-ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. இதில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய 20 ஓவர் அணியின் வருங்கால கேப்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சி பிரிவில் இருந்து குறைந்தது பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்படுகிறார்.

    முன்னாள் துணை கேப்டன் ரஹானே, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் மூவரும் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே சமயம் 20 ஓவர் போட்டியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாக அதிரடியில் வெளுத்து கட்டுகிறார். இதனால் அவர் 'சி'யில் இருந்து 'பி' அல்லது 'ஏ ' பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் சுப்மான் கில் 'சி' இருந்து 'பி' பிரிவுக்கு வருகிறார். சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷன் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    • இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. சார்பில் பெண்களுக்கான 8-வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டது. இந்த தொடரில் இந்திய அணி 'குரூப் 2'ல் இடம் பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் உள்ளன.

    இந்திய அணி பிப். 12-ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் (பிப். 15), இங்கிலாந்து (பிப். 18), அயர்லாந்து (பிப். 20) அணிகளை இந்திய அணி சந்திக்கிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் வருமாறு:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே

    ×