என் மலர்
நீங்கள் தேடியது "Ben Stokes"
- இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
- 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
இப்போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 24 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*
ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999
டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009
அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017-ல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அத்துடன் இப்போட்டியில் 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.
அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 33*
2. கெவின் பீட்டர்சன் : 24
3. இயன் போத்தம் : 20
4. ஸ்டீவ் ஸ்மித் : 19
- கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று பென் ஸ்டோக்ஸ் விமர்சித்தார்.
- நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம் என்று பேட் கம்மின்ஸ் ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று 2 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் வெளியேறியதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர். சொல்லப்போனால் போட்டி முடிந்த பின் தங்களுடைய பெவிலியின் நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் எம்சிசி அமைப்பின் சில உறுப்பினர்கள் தள்ளுமுள்ளு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், கீழ்த்தரமாக அவுட்டாக்கி வெல்ல வேண்டுமா? என்று விமர்சித்தார். மேலும் தாங்களாக இருந்தால் அந்த முடிவை திரும்ப பெற்று பேட்ஸ்மேனை மீண்டும் விளையாட அழைத்திருப்போம் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ஓகே நாங்கள் விதிமுறைப்படியே நடந்து கொண்டோம். என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து சென்றார்.
இந்நிலையில் தாங்கள் எழுதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவர் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் அழுது புலம்பி விமர்சித்து தீர்ப்பதாக இங்கிலாந்தை பிரபல மேற்கு ஆஸ்திரேலியன் பத்திரிக்கை வெளிப்படையாக கலாய்த்துள்ளது. குறிப்பாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முகத்தை ஒரு பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து எடிட் செய்து அவருடைய வாயில் பால் டப்பாவை வைத்திருப்பது போல் அந்த பத்திரிக்கை சித்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புதிய பந்தை ஒழுங்காக பிடித்து விளையாட தெரியாமல் ஆஷஸ் கோப்பையை தவற விடாதீர்கள் என்ற வகையில் அந்த பத்திரிக்கையை நிறுவனம் கலாய்த்துள்ளது.
முன்னதாக 1890-களில் இங்கிலாந்து பத்திரிக்கை இவ்வாறு தங்களது அணியை பகிரங்கமாக விமர்சித்ததே ஆஷஸ் உருவாவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என குறிப்பிடத்தக்கது.
- டோனி டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
- வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை.
ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது.
2-வது போட்டியில் 371 ரன்களை துரத்தும் போது ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்டதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இங்கிலாந்தை பென் டூக்கெட் உடன் இணைந்து பென் ஸ்டோக்ஸ் போராடினார். அதில் பென் டூக்கெட் 82 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜானி பேரஸ்டோவும் சர்ச்சைகுரிய வகையில் அவுட் ஆகி வெளியேறியதால் இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.
இருப்பினும் மறுபுறம் மனம் தளராமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களில் இருந்த போது ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதன் காரணமாக இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ல் ஹெண்டிங்க்லே மைதானத்தில் தனி ஒருவனாக 135* ரன்கள் குவித்து வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றியதை போல் இங்கிலாந்தை வெற்றி பெற வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது. இருப்பினும் முடிந்தளவுக்கு போராடிய அவர் 9 பவுண்டரி 9 சிக்க்சருடன் 155 ரன்களில் அவுட்டானதால் இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் தோற்றது. இருப்பினும் கேப்டனுக்கு அடையாளமாக மகத்தான இன்னிங்ஸ் விளையாடிய அவர் அனைவரது பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி அழுத்தமான சமயங்களில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஃபினிஷராக செயல்படும் திறமையைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் களத்திற்கு செல்லும் போது அழுத்தத்துடனேயே விளையாடுவார்கள். ஆனால் மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் மற்றவர்களை காட்டிலும் பென் ஸ்டோக்ஸ் தம்மால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்புகளை தேடுகிறார். அது போன்ற சூழ்நிலைகளில் அசத்தும் வீரர்களை நினைத்தால் எனக்கு டோனி தான் முதலில் நினைவுக்கு வருவார். குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷிங் செய்யும் விதத்தைப் போல டெஸ்ட் போட்டிகளில் கடைசி நேரத்தில் பென் செயல்படுகிறார்.
அந்த வகையில் வரலாற்றில் அழுத்தமான கடைசி நேரத்தில் அதிலும் கேப்டனாக நின்று வெற்றி பெற வைக்கும் திறமை பெரும்பாலானவர்களிடம் இருந்ததில்லை. சொல்லப்போனால் அந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் எனக்கு 2019 ஹெண்டிங்க்லே போட்டியை நினைவுப்படுத்தியது. முதலில் ஸ்டீவ் ஸ்மித் கேட்ச் தவறை விட்டதைப்போல 116 ரன்களில் இருக்கும் போது மார்க்கஸ் ஹரிஷ் தவற விட்டார். அதனால் அதே போல இப்போட்டியிலும் அவர் வெற்றியை பறித்து விடுவாரோ என்ற பயம் எங்களது மனதிற்குள் இருந்தது.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.
- முதல் இரண்டு போட்டிகளிலும இங்கிலாந்து வெற்றி
- 3-வது போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
- ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன்.
- இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
லண்டன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.
ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
- முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் இந்தியாவிடம் இல்லை.
- பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை.
பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் போல வீரர் இல்லாததே வெளிநாடுகளில் இந்தியா தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா சொந்த மண்ணில் மிகச் சிறந்த கலவை மற்றும் பேலன்ஸ் கொண்டிருப்பதால் அபாரமாக செயல்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 6 - 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஸ்விங் பந்துகளை வீசும் வீரர் இல்லை. அதாவது லேசாக பேட்டிங் செய்யும் பவுலர் அல்லாமல் முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் அவர்களிடம் இல்லை. அதுவே சொந்த மண்ணுக்கு வெளியே இந்தியாவை தடுமாற வைக்கிறது.
ஏனெனில் அவர்களிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் சுப்மன் கில் போன்ற வருங்கால சூப்பர் ஸ்டார்களும் இருக்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் தான் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக மாறும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா முழுமையாக ஃபிட்டாக விளையாடியிருந்தால் அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து அசத்தியிருப்பார்.
அதே போல ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். காயங்கள் எதுவுமில்லாத போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பவுலர். எனவே இது போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது சொந்த மண்ணில் இந்தியாவை மிகவும் வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது.
என்று கூறினார்.
- அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
- பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில், விரைவில் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட வருமாறு பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது
இதைதொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
- இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மற்ற அணிகளுடன் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தந்த அணிகள் வீரர்களின் பலம், எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுக்கும்.

அந்த வரிசையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதையொட்டி இந்த போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார்.
எனினும், உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ்-ஐ விளையாட வைக்க வேண்டும் என்ற கருத்து பொதுப்படையாக நிலவி வந்தது. மேலும் அணி நிர்வாகமும், இதே போன்ற கருத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு உலக கோப்பை தொடர் முடியும் வரை இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்று இருக்கிறார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரிலும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் பிறகு, அவர் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார் என்றும், இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜான்னி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டொப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட் மற்றும் க்ரிஸ் வோக்ஸ்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 368 ரன்கள் சேர்த்தது.
- அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் குவித்தார்.
லண்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.
அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 124 பந்தில் 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 96 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 72 ரன் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நியூசிலாந்து 39 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பென் ஸ்டோக்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
- இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
- இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.
இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.
- முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
- 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது
இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர்
2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி
ஜோ ரூட்
2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி
சுனில் கவாஸ்கர்
2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி
அலஸ்டர் குக்
2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி
விராட் கோலி
1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி
கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.
- ஜனவரி 25 அன்று முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
- இந்திய-இங்கிலாந்து அணியினர் 131 முறை மோதியுள்ளனர்
இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.
முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:
ஜேம்ஸ் ஆண்டர்சன் (வேகப்பந்து வீச்சாளர்)
ஆட்டங்கள் - 35 விக்கெட்டுகள் - 139 சராசரி - 24.89 சிறப்பு - 5/20
பகவத் சந்திரசேகர் (லெக் ஸ்பின்னர்)
ஆட்டங்கள் - 23 விக்கெட்டுகள் - 95 சராசரி - 27.27 சிறப்பு - 8/79
அனில் கும்ப்ளே (லெக் பிரேக்)
ஆட்டங்கள்- 19 விக்கெட்டுகள் - 92 சராசரி - 30.59 சிறப்பு - 7/115
ஆர். அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்)
ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள் - 88 சராசரி - 28.59 சிறப்பு - 6/55

பிஷன் சிங் பேடி (இடக்கர ஸ்பின்)
ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள் - 85 சராசரி - 6/71 சிறப்பு - 29.87
கபில் தேவ் (வேகப்பந்து வீச்சாளர்)
ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள் - 85 சராசரி - 37.34 சிறப்பு - 6/91
பிஎஸ் பேடி மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.