என் மலர்
நீங்கள் தேடியது "Benson"
- பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தஞ்சாவூர்:
பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர்கள் தமிழ்வாணன், ரவிசந்திரன், முருகன், கவிதா, இணை செயலாளர்க் செந்தில்குமார், மகேஷ், அறிவழகன், தமிழ்வா ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பழைய பென்சன் திட்டம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
- அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது.
மதுரை
மதுரை உலக தமிழ் சங்க அரங்கில் தமிழக அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது. இதில் புதிய பென்சன் திட்டத்தை ஒழிப்பது, பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலைவர்கள் பேசினர்.
தமிழக அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், சி.பி.எஸ். ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேசுவரன், மாவட்ட தலைவர் சரவணன், கல்யாணி, மணிகண்டன், மாரியப்பன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிப் (தேனி), முனியாண்டி (விருதுநகர்), செல்வகுமார் (சிவகங்கை), அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில செயலாளர் பரஞ்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.