என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bhagavad gita"
- பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
- தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.
லண்டன்:
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.
லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.
1987 -ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.
டெல்லி குடியரசு விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநிலத்தின் பெருமையை விளக்கும் வகையில் வாகன ஊர்வலம் நடைபெறும்.
இந்த முறை தெலுங்கானா அரசு சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில், 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், கடந்த 22 ஆண்டுகளாக ஐதராபாத் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் நாராயணம்மா என்பவரும் கலந்துகொள்கிறார்.
ரங்காரெட்டி மாவட்டம், யாச்சாரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டுகளில் நாள் தவறாமல் பணியாற்றி வருவதுடன், கூடுதல் நேரம் ஒதுக்கி துப்புரவு தொழிலை அக்கறையுடன் செய்து வருகிறார்.
மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமாயணம், பகவத் கீதை குறித்து நாட்டு பாடல்களை பாடி அசத்தி வருகிறார். இதற்காக நாராயணம்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று, சூர்யாபேட்டை மாவட்டம், கோதாடா பகுதியை சேர்ந்தவர் நாகலட்சுமி. பட்டதாரியான இவர் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒரு ஆட்டோவில், கூண்டு போல் ஏற்பாடு செய்யப்பட்ட மொபைல் கழிப்பறையை இணைத்து ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், சினிமா அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நிறுத்தி வைப்பார். இது பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகும்.
இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக உபயோகிக்கலாம். இதுபோன்ற சேவையை நாகலட்சுமி தவறாமல் செய்து வருகிறார்.
சிறப்பாக செயலாற்றி வரும் சைலஜா, அனிதா ராணி, சுரேகா, ரமாதேவி, லட்சுமி ஆகிய 5 பெண் ஊராட்சி மன்ற தலைவிகளையும் தெலுங்கானா அரசு தேர்வு செய்துள்ளது.
- அரியானாவின் குருஷேத்ராவில் ஆண்டுதோறும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது.
- இதில் பங்கேற்ற உள்துறை மந்திரி பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என்றார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தின் குருஷேத்ராவில் ஒவ்வொரு ஆண்டும் பகவத் கீதை மகா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 24-ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், பகவத் கீதை மகா உற்சவ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
வருடாந்திர சர்வதேச பகவத் கீதை மகா உற்சவம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதனை கடந்த 2016 முதல் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் நிறைவேற்றிக் காட்டி வருகிறார்.
பகவத் கீதையின் போதனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைய வேண்டும்.
கடந்த 2016 முதல் பகவத் கீதை மகா உற்சவம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பகவத் கீதை மகா உற்சவம் அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார்.
யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.
கீதாச்சாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
கீதாச்சாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு, “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டு வுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரவுபதி இருந்தார்.
துரியோதனனுக்கும், தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.
இருவருக்கும் பொது வானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.
அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.
துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ, தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.
சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா? என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.
அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக் காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம் பெற்று இருந்தன.
அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.
அர்ச்சுனனின் சோர்ந்து போன மனத்தை சுறுசுறுப்பாக்கும் வகையில் கிருஷ்ணரின் உபதேசங்கள் இருந்தன. போர் களத்தில் பிறந்த இந்த உபதேசங்கள் சாதாரண மானவை அல்ல. ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தவை. எனவேதான் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உபதேசத்தையும், கோட்பாடுகளையும் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்த கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
யார் ஒருவர் பகவத் கீதை வழி நடக்கிறார்களோ அவர்களது ஆன்மா மேம்படும். சகல துக்கங்களில் இருந்தும் அவர்களால் மிக எளிதாக விலக முடியும். இதுதான் பகவத் கீதைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பாகும். உண்மையில் பகவத் கீதையின் உண்மையான கருத்து என்பது, “காமம், குரோதம், சோம்பல், ஆணவம், சந்தேகம், கவலை போன்றவற்றை நீக்கி ஆன்மிகத்தை அடைய வேண்டும்” என்பதே ஆகும்.
மொத்தம் 18 அத்தியாயங்களை கொண்ட பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஸ்ரீகிருஷ்ணர் கூறிய வேதாந்த பார்வை, சுயதர்ம பார்வை, தர்ம யோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞானயோக பார்வை ஆகிய ஐந்தும் மிக முக்கியமானது ஆகும்.
இதில் வேதாந்த பார்வையில், “ஆத்மா என்பது அழியாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. நீ அழிக்கப் போவது உடம்பைத்தான்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் முழு கீதையும் செயல்படுகிறது.
கிருஷ்ணரின் போதனைகள் வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. குறிப்பாக கீதாச்சாரம் ஒன்றே போதும், நமது மனதை பக்குவப்படுத்த. இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
மகாபாரத போர் நடந்த இடம்தான் பகவத் கீதை பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த போருக்கு குருஷேத்திர போர் என்ற பெயரும் உண்டு. மகாபாரதப் போர் நடந்த பெருமைக்குரிய அந்த இடம் அரியானா மாநிலம் குருஷேத்திரா மாவட்டத்தில் உள்ளது.
இந்த இடம் சண்டிகர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பரதகுலத்தில் பிறந்த குரு எனும் அரசன் இந்த தலத்தில் தவம் இருந்து சிறப்பு பெற்றான். இதனால் அந்த இடம் அந்த அரசனின் பெயராலேயே குருஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
பகவத் கீதையின் தாயக மாக திகழும் குருஷேத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் “பகவத் கீதை ஜெயந்தி விழா” பிரமாண்டமாக கொண் டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விழா நாளை 18-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
குருஷேத்திரம் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானது பிரம்ம சரோவர் புனித குளம் ஆகும். இது இந்தியாவில் பழமை வாய்ந்த மிகப்பெரிய புனித குளமாக கருதப்படுகிறது.
அந்த புனித குளத்தில் நீராடினால் உடலும் உள்ளமும் சக்தி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த புனித குளத்தை உருவாக்கியவர் பிரம்மா ஆவார். மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திய பிறகு அவர் இந்த குளத்தை உருவாக்கியதாக புராணங்களில் குறிப்பிடப்படப் பட்டுள்ளது.
ஜோதிசர்:- இது அர்ச்சு னனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம். இந்த இடம் குருச்சேத்திரம் மாவட்டத்தில் குருச்சேத்திரம்- பெஹோவா சாலையையட்டி அமைந்துள்ளது. குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த இடத்தின் முழு பெயர் ஜோதிசர் தீர்த் என்பதாகும். இந்த இடத்தில்தான் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை கிருஷ்ணர் உபதேசித்தார். இந்த இடத்தில்தான் அர்ச்சுனன் உற்சாகம் பெற்றார்.
அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில்தான் கீதா உபதேசம் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அந்த ஆலமரத்தை புனிதமாக கருதி கம்பிவேலி போட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த மரத்திற்கு கீழ் கிருஷ்ணரின் பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கீதா உபதேச சிலை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. அருகில் தீர்த்தமும் இருக்கிறது. கிரகணங்களின்போது இந்த தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராடி பித்ருதர்பணம் செய்து விட்டு செல்வார்கள்.
இந்த தீர்த்தக் கரையோரம் அமர்ந்து பகவத் கீதை படிப்பது மிகுந்த பலன்களை தரும் என்பது மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதே பகுதியில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் ஆலயம் உள்ளது. பீஷ்மரை சுற்றி பாண்டவர்கள் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் அந்த பகுதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
குருசேத்திர பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் வருமாறு:-
* பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய ரதம் உள்ளது.
* கிருஷ்ணா அருங்காட்சியகம்:- மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம்.
* பீஷ்ம குண்டம்:- இது பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்.
* பிரம்ம குண்டம்:- இது அர்ச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
* குருஷேத்திர அறிவியல் அருங்காட்சியகம்.
இந்த தலத்தில் பகவத் கீதைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கும் சமயத்தில் நாடு முழுவதும் பகவத் கீதை பிறந்த தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவத் கீதை படியுங்கள். விஷ்ணுசகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.
பகவத் கீதை புத்தகம் தானம் செய்யுங்கள்
இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பாக, போர்க்களத்தில் தனது உறவினர்களை எதிர்த்து போரிட அர்ச்சுனன் விரும்பவில்லை. அப்பொழுது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பகவான், கர்ம வினைகளை பற்றி எடுத்துரைத்து அர்ச்சுனனை போருக்கு தயாராக்கினார்.
அர்ச்சுனனுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் நடந்த உபதேச உரையாடலே ‘பகவத் கீதை’ ஆகும். இது இந்து மதத்தின் புனித நூலாகவும் திகழ்கிறது. இது 18 பகுதிகளையும், 650 செய்யுள்களையும் கொண்டது.
வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் தத்துவமாகும். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’விற்குரிய ஆழமான பொருளாகும்.
அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று பகவான் கிருஷ்ணர் கூறினார்.
எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
*****
கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வதுபோல, ஆத்மா, சிதைந்துபோன உடம்புகளைக் களைந்து விட்டுப் புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது.
*****
உனக்கு வேண்டாதவர், சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லுவார்கள். உன் வலிமையையும், திறமையையும் பழிப்பார்கள். அதைவிடக் கொடிய துன்பம் ஏது?
*****
உன் கடமை தொழில் செய்வது; அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவையல்ல. என்ன வரப்போகிறதென்று நினைக்காதே; அதற்காகத் தொழில் செய்யாமலும் இராதே.
*****
புத்தியுள்ளவன், இங்கு நல்ல செய்கை, தீய செய்கை இரண்டையுமே துறந்து விடுகிறான். செய்வதைத் திறமையாகச் செய்வதே யோகம்.
*****
புத்தியுடைய உண்மைப் பேரறிஞர்கள், தங்கள், செய்கை களுக்குக் கிடைக்கும் லாபத்தைத் துறந்து, பிறப்போடு பூட்டப்பட்ட விலங்குகளை நீக்கி ஆனந்தம் என்னும் பதவி அடைகிறார்கள்.
*****
மோகம் என்பது ஒருவகைக் குழப்பம். உனது அறிவு அதைக் கடந்து சென்று விடுமானால், அப்போது நீ கேட்டது, கேட்கப்போவது, இரண்டிலும் உனக்கு வேதனை வராது.
*****
மனிதன் ஒன்றை உணர்ச்சி பூர்வமாக நினைக்கும்போது அதில் ஒருவகைப் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதலால் ஆசை உண்டாகிறது. ஆசையால் கோபம் உண்டாகிறது.
*****
கோபத்தால் மயக்கம் வருகிறது; மயக்கத் தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுவதால் அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெடுவதால் அழிந்து போகிறான்.
*****
விருப்பு வெறுப்பில்லாமல் புலன்களை மனதால் ஆட்டி வைத்தபடி, தனக்குத் தானே விதி வகுத்துக் கொண்டு நடக்கும் மனிதன் ஆறுதலடைகிறான்.
*****
அமைதி வந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் ஓடிவிடுகின்றன. மனம் அமைதி அடைந்ததும், எவனுடைய அறிவும் ஒருமுகமாகி விடுகிறது.
*****
தன்வரைக்கும் திருப்தியடைகிறவன், தன்வரைக்கும் மகிழ்ச்சியடைகிறவன், எவனுக்கும் தொழில் இல்லை.
*****
உலகத்தில் உள்ள பொருட்களால் சுகமும் ஏற்படுகிறது; துக்கமும் ஏற்படுகிறது. காரணம் என்ன? அந்தப் பொருட் களுக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு. புத்தி உள்ளவன் அழியக்கூடிய விஷயங்களில் நாட்டம் செலுத்த மாட்டான்.
*****
எவனொருவன் உடம்பு நன்றாக இருக்கும் போதே, இந்தப் பிறப்பிலேயே, காமக் குரோதங்களால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கும் சக்தி உள்ளவனோ அவனுக்குப் பெயர்தான் யோகி. அவன்தான் நிம்மதியடைந்த மனிதன்.
*****
களங்கங்களை நீக்கியவர்கள்; சந்தேகத்தை அறவே ஒழித்தவர்கள்; மனத்தை முழுக்க முழுக்கக்கட்டுப்படுத்தியவர்கள்; முடிந்த அளவு எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பிரம்மானந்தத்தை அடைகிறார்கள்.
*****
எவனால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவனுக்கு எதுவுமே கிடைக்காது. எவன் மனத்தை ஒழுங்குப்படுத்தி ஜாக்கிரதையாக முயற்சி செய்கிறானோ, அவனுக்கு எல்லா யோகமும் கிட்டும்.
*****
அர்ஜுனா! பிரம்ம லோகத்திற்குக்கூட அழிவிருக்கிறது. ஆகையால், அங்கே செல்கிறவர்கள் கூட, மறுபிறவி எடுக்க வேண்டிவரும். ஆனால் என்னை அடைந்துவிட்டாலோ மறுபிறவியே கிடையாது.
*****
அங்கிங்கெனாதபடி எங்கும் என்னைக் காண்பவன், எல்லாமே என்னிடம் இருப்பதைக் காண்பவன் எவனோ அவன் கண்களுக்கு நான் காட்சி தருவேன். அது மட்டுமல்ல; அவனை நானும் கண்டு கொள்வேன்.
*****
சாப்பிடுவதில் ஒரு அளவு; நடமாட்டத்தில் ஒரு அளவு; காரியங்களில் ஒரு அளவு; தூக்கத்தில் ஒரு அளவு; விழித்திருப்பதில் ஒரு அளவு - இதுவே ஒருவகை யோகம். இதுவே துன்பம் இல்லாமலிருக்க வழி.
*****
ஆத்மாவுக்கு ஞானம் வந்துவிட்டால், அஞ்ஞானம் அழிந்துவிடும். அந்த ஞானம் சூரியனைப்போல் அந்தப் பொருளைப் பிரகாசமாகக் காட்டுகிறது.
*****
பரம்பொருள் என்னும் அந்தப் பரமாத்மாவின் தத்துவத்தில் சகலத்தையும் காணிக்கை வைத்து, தன் சொந்த அறிவாலேயே களங்கங்களைத் தீர்த்துக் கொண்டவர்கள், மறுபிறப்பில்லாத முத்தியை அடைகிறார்கள்.
*****
சகல ஞானங்களும் கைவரப் பெற்ற ஒருவன், தனக்குப் பிரியமான ஒன்று கிடைத்துவிட்டால், ஓகோ என்று குதிக்கவும் கூடாது; தான் விரும்பாததை அடைய நேர்ந்தால் அழவும் கூடாது.
*****
நல்லன காக்க, தீயன அழிக்க, அறத்தை நிலை நிறுத்த, ஒவ்வொரு யுகத்திலும் நான் வடிவமெடுக்கிறேன்.
*****
இது என் தெய்வீகம். என் பிறப்பும், செயலுமே தெய்வீகம். இதனை நன்றாக உணர்ந்தவன் இறந்து போனால், அவனுக்கு மறுபிறப்பு இல்லை. காரணம் அவன் என்னோடு சங்கமமாகி விடுகிறான்.
*****
ஆசையை விட்டு, அச்சத்தை விட்டு, கோபத்தை விட்டு, என் நினைவே ஆகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி, அறிவாலே தவம் செய்து பரிசுத்த மாகி என்னுடைய இயல்புகளை அடைந்தவர்கள் பலர்.
*****
எப்போதும் பற்றுதலை விட்டுச் செய்யக் கூடிய தொழில் எதுவோ, அதைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழிலைச் செய்கிறவன் தான், பரம்பொருளை அடைகிறான்.
*****
உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ அதையே மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். அவன் எதை நியாயப்படுத்துகிறானோ, அதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
*****
அர்ஜுனா! புலன்கள் மனத்தால் இழுக்கப்படாமல், மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, எவன் கரும யோகம் என்னும் தொழில் நிலையில் ஈடுபடுகிறானோ, அவன் சிறந்தவன்.
*****
“கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால், அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.
ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே, அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும் கூட. பூஜை நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி சிறந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக எப்படி கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார்?” என்பதுதான் அர்ச்சுனன் மனதில் உதித்த சந்தேகம்.
தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே சென்று கேட்டான், அர்ச்சுனன். அதற்கு கிருஷ்ணன் பதிலளிக்கத் தொடங்கினார்.
“அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என்னிடம் தோழமை கொண்டவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசிக்கவில்லை. நீ நினைப் பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தும் உணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கவுரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.
தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. அவர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.
ஆனால் நீ, அவர்களைப் போன்றவனல்ல, மாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இப்போதும் கூட, உன்னைவிட வயதிலும், அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து, அவர்களுக்காக என்னிடம் வாதிட்டுக் கொண்டிருக்கிறாய்.
களத்திலே நின்றபோதும் ‘உற்றார், உறவினர், மதிப்பிற்குரிய பெரியோர் களையெல்லாம் எப்படிக் கொல்வது? இந்த யுத்தமும் இழப்பும் தேவைதானா?’ என்றெல்லாம் நீ யோசித்தாய். ‘அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கினாய். ‘பிச்சை எடுத்து வாழவும் நான் தயார்’ என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல.
பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க முன்பு நீ நினைத்திருந்தாய் என்றாலும், களத்தில் நின்றபோது அவர்களை மன்னித்து, ‘போரிட வேண்டாம்’ என்று சொல்லும் உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது? அநீதி எது? என்று சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.
நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; உன்னிடம் இருந்த தனிச் சிறப்புதான் காரணம்” என்றார் கிருஷ்ணன்.
அர்ச்சுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய், அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.
உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற்றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்