என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhagwant Mann"

    • கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வராக விரும்புவதாக எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகின்றனர்.
    • டெல்லியில் எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும் என்றார்.

    சண்டிகர்:

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்தது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கெஜ்ரிவால் விரைவில் பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரியான பகவந்த் மான் சர்துல்கர் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எதிர்க்கட்சித் தலைவர்கள் தாங்கள் யூகிப்பதை எல்லாம் வதந்தியாகப் பரப்பி வருகின்றனர்.

    எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 11ம் தேதி, பஞ்சாப் மாநில அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இது எங்கள் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம். ஆனால், கெஜ்ரிவால் பஞ்சாப் முதல் மந்திரி பதவியை ஏற்பதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினார் என எதிர்க்கட்சியினர் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். அதில் துளியும் உண்மை இல்லை.

    டெல்லியில் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து ஆம் ஆத்மி தன் மக்கள் பணிகளைத் தொடரும்.

    எங்கள் ஒருங்கிணைப்பாளர் கட்சியை கட்டமைக்கும் பணியில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவார் என தெரிவித்தார்.

    • இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசே ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
    • ர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதல்வருக்குத் தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்

    சர்ச்சை அறிவிப்பு 

    பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இல்லாத ஒரு துறைக்கு 20 மாதங்களாக குல்தீப் சிங் தலிவால் அமைச்சராக இருப்பது தெரியவந்துள்ளது. 

    2023 மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின் போது குல்தீப் சிங் தலிவாலிடம் இருந்த விவசாயிகள் நலத்துறை பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக நிர்வாக சீர்திருத்தத் துறை இலாகா வழங்கப்பட்டது. வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறையும் அவர் வசம் இருந்தது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 21) பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில், "வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான குல்தீப் சிங் தலிவாலுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை ஒதுக்கப்பட்டது. எனினும், நிர்வாக சீர்திருத்தத் துறை எனும் துறை இப்போது இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு மூலம் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கடந்த 20 மாதங்களாக இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசே ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    விமர்சனம்

    இது தொடர்பாக அம்மாநில மூத்த பாஜக தலைவர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை கேலிக்குள்ளாகி உள்ளது. ஒரு அமைச்சர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதல்வருக்குத் தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்று தெரிவித்தார்.

     

    முதல்வர் விளக்கம் 

    இதற்கிடையே இந்த சர்ச்சை குறித்து முதல்வர் பகவந்த் மான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக சீர்திருத்தத் துறை முந்தைய அரசாங்கங்களின் போது இருந்தது. ஆனால் நாங்கள் அதை மறுசீரமைத்துள்ளோம்.

    முன்பு இது வெறும் பெயரளவிலான துறையாக இருந்தது. அதில் உண்மையான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் அதை தற்போது மற்ற துறைகளுடன் இணைத்துள்ளோம்.

    முன்னதாக வெவ்வேறு துறைகள் காரணமாக கோப்புகள் இங்கும் அங்கும் அனுப்பப்பட்டன. இதனால் வேலையில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நிர்வாக அமைப்பை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற, அது மற்ற துறைகளுடன் இணைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 

    • சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது
    • சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்.

    பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்தது.
    • மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

    பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்ததாகக் கூறினார்.

    ஜலந்தரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சொகுசு பேருந்து சேவையைத் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு. கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை.

    ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனைத் தொடங்குவது உட்பட, ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் பஞ்சாபை துடிப்பானதாக்குவோம். முந்தையை அரசு பஞ்சாப் அரசை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முந்தைய ஆட்சிகள் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது குண்டர்கள் அரசியல் ஆதரவைப் பெற்றனர். மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பகவந்த் மானின் இந்த நடத்தை பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்
    • அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி விளக்கம்

    சண்டிகர்:

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிகமாக மது குடித்ததால் சமீபத்தில் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமானத்தில் பகவந்த் மான் பயணிக்க இருந்ததால், அவருக்காக விமானம் 4 மணி நேரம் காத்திருந்ததாகவும், பின்னர் தள்ளாடியபடி அவர் விமானத்தில் ஏறியதாகவும், இது விமானத்தின் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதால், அவர் இறக்கவிடப்பட்டதாகவும் செய்திகள்  வெளியாகி உள்ளன.

    இந்த தகவல் குறித்து ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் டுவிட்டரில் பதிவிட்டு, பஞ்சாப் மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ள சுக்பிர் சிங் பாதல், பகவந்த் மானின் இந்த நடத்தை, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை தலைகுனிய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    "முதல்வர் பகவந்த் மான் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்றும், அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் பயணி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த தகவல் வதந்தி என்றும், பிராங்பர்ட் விமான நிலையத்தில் பகவந்த் மான் இறக்கிவிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது. அரசியல் போட்டியாளர்களால் தவறான மற்றும் கீழ்த்தரமான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வரால் விமானத்தில் ஏற முடியவில்லை என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறினர்.

    • பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு தற்போது 48 வயதாகிறது.
    • குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை பகவந்த் மான் மணக்கிறார்.

    சண்டிகார் :

    நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர்.

    தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்த நிலையில் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது தாயார் ஹர்பால் கவுரும், சகோதரி மான்பிரீத் கவுரும் ஏற்பாடு செய்துள்ளனர். குர்பிரீத் கவுர் என்ற டாக்டரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் மணக்கிறார்.

    மணவிழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியோ ஆகியோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளதாக சண்டிகாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×