search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Ratna"

    • ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும்.
    • மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ள ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழிலதிபரும், கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்ர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது 'பாரத ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரத்தன் டாடாவிற்கு எற்கனவே பத்ம விபூஷன், பாரத பூஷன் வழங்கப்பட்டுள்ளது.
    • பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது.- சுஹேல் சேத்

    டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    "இதை நான் சொல்லக்கூடாது, இருந்தாலும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது. தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, அவர் தனது பொதுசேவை மூலம் மில்லியன் கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் ஒரு உண்மையான இந்தியன்... அது விருதை அழகாக்க மட்டுமே செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை. இன்னும் ஒவ்வொரு இந்தியனும் அவனது குடும்ப உறுப்பினராக இருந்தான். ஒரு மனிதனுக்காக 1.4 பில்லியன் மக்கள் துக்கம் அனுசரிப்பது அரிது.

    அதுதான் ரத்தன் டாடா. தொடர்ந்து இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும். ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

    • மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
    • புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு..

    மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்னர்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். இந்நிலையில் இன்று நடக்க ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டி  சோட்டு சிங் என்ற முக்கிய தலைவர் இந்த போஸ்டர்கள், கட் அவுட்கள் மூலம் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவை கட்சி அலுவலகம் உட்பட வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன.

    அதில் நிதிஷ் குமாருடன் கட்சியை சேர்ந்த தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் மாநிலத்துக்கு செய்தவையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புடைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.

    • பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது.
    • கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது அளிக்கவேண்டும் என பா.ஜ.க. எம்.பி. கோரினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. கேள்வி நேரத்தின்போது எழுந்து பேசிய உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. அருண் குமார் சாகர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    மேலும், தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழவும், சொந்த காலில் நிற்கவும் காரணமானவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.

    மும்பை:

    டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட்-க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் யு19 பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வென்றுள்ளார்.

    3 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு முன்பாக, ராகுல் டிராவிட் யு19 இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதேபோல் என்சிஏ-வில் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் என்சிஏ தலைவராக வந்தார்.

    அப்போது முதல் இந்திய இளம் வீரர்களை தயார்ப்படுத்தி வந்துள்ளார். சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், அபிஷேக் சர்மா, ரியான் பராக் என்று ஏராளமான வீரர்களை உருவாக்கியுள்ளார். அதேபோல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், சிராஜ், சஞ்சு சாம்சன், விஹாரி உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் உருவான வீரர்கள் தான். அந்த அளவிற்கு இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தாக்கம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அரசு ராகுல் டிராவிட்டுக்கு பாரத் ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாரத் ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன.

    அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன. தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும்.

    மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    இதற்கு முன்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 2014-ம் ஆண்டு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
    • பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

    இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.

    பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    • 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
    • எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.

    ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது

    அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.

    முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர்.

    மேலும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா விருது எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, பாரத ரத்னா விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடன், நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

    என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    ×