என் மலர்
நீங்கள் தேடியது "Bharatiyar"
- திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார்.
- ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மண்டபத்தையும் மகாகவி பாரதியார் உருவப் படத்தையும் திறந்து வைத்தார்.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறை சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
- தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
சீர்காழி:
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
154-வது தொகுதியாக சீர்காழிக்கு நேற்றுவந்தார். பின்னர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது
2024-ல் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு யாத்திரையில் பங்கேற்றுள்ளீர்கள். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், நந்தனார் போன்ற மகான்கள் பிறந்த ஊரில் மகான்களின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த ஊர். சுதந்திர தாகம் தீட்டிய நீலகண்டபிரம்மச்சாரிக்கு ஒரு வேளை சாப்பிட உணவு இல்லை என பாரதியாரிடம் உணவுகேட்டார்.
அப்போது முண்டாசு கவிஞர் பாரதியார் தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என நீலகண்டபிரம்மச்சாரிக்காக பாடலை பாடினார். பாரதியாரின் கனவினை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார்.
சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் வளாகத்தில் ஐம்பொன் சிலைகள், தமிழகத்தின் அரிதான 410, தேவார செப்பேடுகள் கிடைக்கப் பெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் காலத்தின் பொக்கிஷம். கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தேவார செப்பேடுகள் ஆகியவற்றை ஸ்ரீ சட்டை நாதர் திருக்கோவிலுக்கு உள்ளேயே தான் வைக்க வேண்டும். தவிர மியூசியத்தில் இருக்க கூடாது.
மயிலாடுதுறையை சுற்றிலும் நவகிரக கோவில்கள், சைவ வைணவ தளங்கள் ஆன்மீகவாதிகள் குடியிருக்க கூடிய எம்பி தொகுதியாக உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் ஆன்மீக தலங்களாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணத்தை மாற்றி காட்டுவோம். தமிழகத்திற்கு உண்மையான, முழுமையான வளர்ச்சி என்ன என்பதை பாரத பிரதமர் மோடி செய்து காட்டுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- ஜதி பல்லக்கு பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
- உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
- தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார்.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய! என்று தெரிவித்துள்ளார்.
- தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞர்.
- தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்தநாள். கவிதைகள் மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் இலக்கணம் வகுத்த மாபெரும் கவிஞரான பாரதியாரை அவரது பிறந்தநாளில் போற்றுவோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமைகொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.