search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike thief"

    • 6 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை மற்றும் ஆற்காடு ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்‌. கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது.

    இது குறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது.

    இது குறித்து புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அந்த நேரத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரை மடக்கி விசாரித்தனர். இதில் அவர் கலசபாக்கம் அருகே உள்ள ஆதம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 53) என்பது தெரியவந்தது.

    போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர் வேலூர் பழைய பஸ் நிலையம் சாரதி மாளிகை ஆற்காடு ரோடு மற்றும் இன்று காலை செல்லியம்மன் கோவில் ஆகிய இடங்களில் 6 பைக்குகளை திருடியது தெரிய வந்தது.

    திருடிய வாகனங்க ளை வேலூர் பாலாற்றங்க ரையோரம் மறைத்து வைத்திருந்தார். அந்த 6 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பழனியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • எஸ்.எஸ்.காலனி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (20). சம்பவத்தன்று இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (19) மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×