என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bilawal Bhutto"
- நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி ஆட்சி செய்து வருகிறது.
- பட்ஜெட் தொடர்பான பரிந்துரைகளை ஏற்காகததால் பிலாவல் பூட்டோ கட்சி அதிருப்தியில் உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஆனால் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி பிலாவல் பூட்டோ-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சியில் மேலும் சில சிறிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
நவாஸ் ஷெரீப் பிரதமராக உள்ளார். சர்தாரி அதிபராக உள்ளார். பிலாவல் பூட்டோ கட்சி ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறது.
தற்போது பாகிஸ்தான் அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்காக பட்ஜெட்டை தயார் செய்யும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய சில விசயங்களை பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரைத்துள்ளது.
ஆனால், நவாஸ் ஷெரீப் கட்சி பிலாவல் பூட்டோ கட்சியின் பரிந்துரைகளை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. தங்களது பரிந்துரைகள் ஏற்கப்படதாத நிலையில், தங்கள் கட்சியின் ஆதரவை இன்னும் மதிக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளத. இதனால் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே நவாஸ் ஷெரீப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஜமியாத்- உலேமா-இ-இஸ்லாம் (எஃப்) கட்சிக்கு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். அந்த கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுரை கூட்டணியில் இணையுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் மவுலானா பஸ்லுர் கூட்டணியில் இணைய மறுப்பு தெரிவித்து விட்டார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "ஜேயுஐ-எஃப் கட்சி ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியுடன் இணையும் என நான் நினைக்கவில்லை. ஆட்சியில் இடம் பிடிப்பது எங்களுடைய அரசியல் அல்ல. தற்போது இருக்கும் அரசு அமையதற்கு முன்னதாக நாங்கள் ஏற்கனவே சிறந்த வாய்ப்புகளை பெற்றிருந்தோம்." என்றார்.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற கூட்டணில் மவுலானா ரெஹ்மான் இடம் பிடித்திருந்தார். இம்ரான் கான் கட்சி 2022 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார். அப்போது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் ஆட்சி அமைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது
- 2 வருடங்கள் என்னை பிரதமராக்க ஆதரவு தருவதாக கூறினார்கள் என்றார் பூட்டோ
பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பிலாவல்-பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP), முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சி (PTP) மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML) ஆகிய கட்சிகள் களமிறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.
இதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTP) கட்சியை சேர்ந்த பல சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். ஆனால், இத்தேர்தல் முடிவுகளில் எவருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
தற்போது வரை பிரதமர் பதவியில் யார் அமர்வது என்பதில் இழுபறி நிலவுகிறது.
தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் ஷரீஃபும் ஆட்சியமைப்பது குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிந்து மாகாணத்தில், தட்டா நகரில் பிலாவல் பூட்டோ உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
முதல் 3 வருடங்கள் அவர்கள் தரப்பில் பிரதமராக ஒத்து கொண்டால், மீதம் 2 வருடங்களுக்கு நான் பிரதமராக முடியும் என என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த திட்டத்திற்கு நான் சம்மதிக்கவில்லை.
எனக்கு இவ்வாறு பிரதமர் ஆவதில் ஒப்புதல் இல்லை.
நான் பிரதமராக வேண்டுமென்றால் பாகிஸ்தான் மக்கள் என்னை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி விட்டேன்.
அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் நலனை மறந்து மக்கள் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு பிலாவல் கூறினார்.
தேர்தல் முறையாக நடைபெறவில்லை என இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
- நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.
இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.
- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
- அவரது தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி அறிவித்தார்.
லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
- பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி பயன்படுத்திய வார்த்தைக்கு கடும் கண்டனம்.
- இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள்.
அஜ்மீர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் மோடி என அவர் குறிப்பிட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி ஒட்டு மொத்த தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார்:
பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்.
பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் வைத்துதான், அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
- பிலாவல் பூட்டோ கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டு பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி பதில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பூட்டோ சர்தார் கூறுகையில், ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடை விதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு என தெரிவித்தார்.
- உருகும் பனிப்பாறைகளே, பாகிஸ்தானின் பேரழிவு நிலைக்கு காரணம்.
- பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்,இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஊடக குழுவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறோம். தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இணைந்து செயல்படுவது பற்றி சிந்திக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தால் உருகும் பனிப்பாறைகள்தான் பாகிஸ்தானின் இந்த பேரழிவு நிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பல காரணங்களுக்காக நாங்கள் (இந்தியாவுடன்) இணைந்து செயல்படுவது 2018-19 ஆண்டிற்கு பிறகு சாத்தியமற்றதாகி உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஏதேனும் ஒரு பகுதி இருந்தால், அதுதான் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்,
ஏனென்றால், நாங்கள் அனுபவித்தது, எங்கள் எதிரிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த பிலாவல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்ப்பதில் பாகிஸ்தான் நிலைப்பாடு உறுதியானது என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்