என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Biography"
- எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை பிரவுசிங் ஹிஸ்டரி மூலம் தெரிந்துகொண்டேன்.
- அவரின் சாம்பலை வீட்டுத் தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன்.
புத்தகம்
உயிரோடு இருக்கும்போது தனக்கு துரோகம் செய்த கணவனின் சாம்பலை சாப்பிட்டதாக கனேடிய எழுத்தாளர் தனது சுயசரிதையில் எழுதியுள்ள சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் கனேடிய எழுத்தாளர் ஜெசிகா வைட் [Jessica Waite] இறந்த பாஸ்டர்ட்ஸ்கான ஒரு விதவையின் வழிகாட்டி [A Widow's Guide to Dead Bastards] என்ற பெயரில் எழுதியுள்ள அவரது memoir வகை சுயசரிதை நினைவுக் குறிப்பு புத்தகம் சமீபத்தில் வெளியானது.
அதில் தனது கணவன் சீன் வைட் [Sean Waite] தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது, அதை தான் கண்டுபிடித்தது, அவர் கடந்த 2015 இல் இறந்தபிறகு நடந்த சம்பவங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெக்சாஸ்-கு வேலை நிமித்தமாக சென்ற கணவர் உயிரிழந்தார்.
பிரவுசிங் ஹிஸ்டரி
அவரது உடல் எங்கிருக்கிறது என்பது பற்றி கேட்க ஹவுஸ்டன்[Houston] நகர மருத்துவமனையில் அலைபேசி எண்ணை பற்றி தேடுவதற்காக எனது கணவரின் ஐ- பாட் -ஐ எடுத்துக் பார்த்தேன். ஹவுஸ்டன் என்று தேடியதும் அவரது பிரவுசிங் ஹிஸ்டரியில் ஹவுஸ்தண் எஸ்கார்ட்ஸ் [escorts][பாலியல் துணைகள்] பற்றி எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தது.
பல்வேறு இடங்களில் உள்ள எக்ஸ்கார்டுகள், அவர்கள் விலை உள்ளிட்டவை குறித்து கணவர் தேடியதை தெரிந்துகொண்டேன். அதன்மூலம் எனது கணவன் பல் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாக இருந்ததையும் கண்டுபிடித்தேன்.
எஸ்கார்ட்
ஆபீசில் வேலை இருக்கிறது வீட்டுக்கு வர நேரமாகும் என்று என்னுடன் கூறிவந்த அவர் அங்கு உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்த்து அதை சீரான வரிசையில் போல்டர்கள் போட்டு சேமித்து வைத்துள்ளார். எஸ்கார்ட் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கென்றே கொலோராடோவில் [Colorado] அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தும் எனக்கு தெரியவந்தது.
சாம்பல்
அவர் இறந்த துக்கம் ஒருபுறம், அவரை பற்றி தெரிந்துகொண்டதால் ஏற்பட்ட கோபமும் விரக்தியும் ஒருபுறம் என்று நான் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்தேன். எனவே இறுதிச் சடங்கு முடிந்தவுடன் என்னிடம் தரப்பட்ட அவரது உடலின் சாம்பலை வீட்டுக்கு வந்து தோட்டத்தில் எனது வளர்ப்பு நாயின் மலத்துடன் கலந்தேன். எனது ஆத்திரம் அடங்கவில்லை. எனவே மேற்கொண்டு அந்த சாம்பலை சாப்பிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சுவை
மேலும் அதன் சுவை எப்படி இருந்தது என்று விலாவரியாக அந்த புத்தக்த்தில் எழுதியுள்ளார். அதாவது, கணவரின் சாம்பல் பேக்கிங் பவுடரை விட சொசொரப்பாகவும், உப்பை விட தூசியாகவும் இருந்தது. எனது நாக்குக் கீழ் சுரந்த உமிழ்நீரில் கலந்த சாம்பலை நான் விழுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது புதிய துணையை தான் தேடிக்கொண்டாலும், உயிரிழந்த கணவரை நினைக்காத நாளில்லை என்று தேர்விற்கும் ஜெசிகா, தனது உடலில் ஒரு பாகம் காணாமல் போனது போல் உணர்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
- ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
- ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோகன் சரண் மாஜி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார்.
- பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் நடந்த சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஒடிசா சட்டசபைக்கு மொத்தம் உள்ள 147 இடங் களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 77 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. பிஜூ ஜனதா தளத்துக்கு 51 இடங்களும், காங்கிரஸ்-14, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு-1 இடமும் கிடைத்தன. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேலிடப் பார்வையாளர் களாக மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவியேற்க உள்ளனர். மேலும் மந்திரி களும் பதவி ஏற்பார்கள். புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் பா.ஜ.க.வின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் மோகன் சரண் மாஜி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கியோஞ்சர் மாவட்டத்தில் ராய்கலா கிராமத்தில் காவலாளிக்கு மகனாக பிறந்தார். அந்த கிராமத்து தலைவராகி பொதுவாழ்வை தொடங்கினார்.
பட்டதாரியான இவர் 2000-ம் ஆண்டு தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஒடிசா சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2004, 2019 தேர்தல்களில் வெற்றிபெற்றார். தற்போதும் வெற்றிபெற்று முதல்-மந்திரியாக பதவியேற்கிறார். பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு செயலாளராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.
முதல்-மந்திரியாக பதவி யேற்க உள்ள மோகன் சரண் மாஜி சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
ஜெகந்நாதர் அருளால் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. இந்த நேரத்தில் 4.5 கோடி ஒடிசா மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்து உள்ளார்கள். அந்த நம்பிக்கையை பா.ஜ.க. அரசு காப்பாற்றும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது.
- படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப் பதக்க ம்வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒன்றை வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.
அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் கார்த்திக் ஆர்யனின் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கமிட்மென்டை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்(67), உத்தரபிரதேச மாநிலம் பாபவ்ராவில் பிறந்தவர். 13 வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இயற்பியல் விரிவுரையாளராக வாழ்க்கையை தொடங்கியவர். பா.ஜனதா சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1984-ல் மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் ஆனார். 1997-ல் மாநில பா.ஜனதா தலைவர் ஆனார். மாநில மந்திரியாக பணியாற்றி உள்ளார். 1999-ல் மத்திய மந்திரியாக பணியாற்றிய இவர், 2000-ல் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தார். இரு முறை பா.ஜனதா தேசிய தலைவர் பதவி வகித்தார். 2014 தேர்தலில் லக்னோ தொகுதியில் வென்று மோடி அரசில் உள்துறை மந்திரி பதவி வகித்தார். இம்முறையும் அதே தொகுதியில்தான் வெற்றி பெற்றுள்ளார். சாவித்திரி என்ற மனைவியும், பங்கஜ், நீரஜ், அனாமிகா என 3 குழந்தைகளும் உள்ளனர்.
அமித் ஷா
அமித் ஷா (வயது 54), மராட்டிய மாநிலம் மும்பையில், குஜராத் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பி.எஸ்.சி. உயிர் வேதியியல் பட்டதாரி. குழந்தைப்பருவம் முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1986-ல் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். மறுஆண்டு முதல் கட்சியின் இளைஞர் அணியில் தீவிர பங்கேற்றார். 1991 பாராளுமன்ற தேர்தலில் அத்வானிக்காக காந்திநகரில் பிரசாரம் செய்தார். 1995-ல் குஜராத்தில் கேசுபாய் பட்டேல் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றபோது, மோடியுடன் இணைந்து கிராமப்புறங்களில் கட்சியை கொண்டு செல்ல உழைத்தார். 2001-ல் மோடி, குஜராத் முதல்-மந்திரியானபோது அவரது வலது கரம் ஆனார். 2002 தேர்தலுக்கு பின்னர் மோடி மீண்டும் முதல்-மந்திரியானபோது உள்துறை, சட்டம் என 12 துறைகளுக்கு மந்திரியாக பணியாற்றினார். மோடி பிரதமரானபோது, அமித் ஷாவும் தேசிய அரசியலுக்கு போனார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2014 ஜூலையில் பா.ஜனதா கட்சிக்கு தலைவர் ஆனார். தொடர்ந்து மோடிக்கு பக்க பலமாக திகழ்ந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கொண்டே 2019 தேர்தலில் அத்வானியின் தொகுதியான குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இவருக்கு சோனல் என்ற மனைவியும் ஜெய்ஷா என்ற மகனும் உள்ளனர்.
நிதின் கட்காரி
நிதின் கட்காரி (62), மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர். எம்.காம். எல்.எல்.பி., பட்டங்கள் பெற்றவர். மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரி பதவி வகித்தவர். மராட்டிய மாநில பா.ஜனதா கட்சிக்கு தலைவராக இருந்தவர். பின்னர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். கடந்த தேர்தலில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று, மோடி அரசில் சாலை, போக்குவரத்து, கப்பல் துறை மந்திரியாக இருந்தார். இம்முறையும் நாக்பூரில் போட்டியிட்டு வென்று மந்திரியாகி உள்ளார். மனைவி காஞ்சன், 3 குழந்தைகள் உள்ளனர்.
சதானந்த கவுடா
சதானந்த கவுடா (66). கர்நாடக மாநிலம் சுல்லியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றியவர். 2011-ல் முதல்-மந்திரி ஆனார். 2014-ல் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று ரெயில்வே, சட்டம், புள்ளிவிவரம் துறைகளில் மந்திரியாக இருந்தார். இந்த தேர்தலிலும் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். மனைவி தத்தி, 2 குழந்தைகள் உள்ளனர்.
ராம்விலாஸ் பஸ்வான்
ராம்விலாஸ் பஸ்வான் (72). பீகாரில் ககாரியாவில் பிறந்தவர். சட்டம் படித்தவர். சம்யுக்தா சோசலிச கட்சி, லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் என பல கட்சிகளில் இருந்தவர். கடைசியில் லோக்ஜனசக்தி கட்சியை நிறுவி நடத்தி வருகிறார். முந்தைய மோடி அரசில் உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மகன் சிராக் பஸ்வான் மந்திரி ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வானுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மனைவி ரீனா சர்மா, 4 குழந்தைகள் உள்ளனர்.
நரேந்திரசிங் தோமர்
நரேந்திர சிங் தோமர் (61). மத்திய பிரதேச மாநிலம், மொரினாவில் பிறந்தவர். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர். முந்தைய மோடி அரசில் ஊரக வளர்ச்சித்துறை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பதவி வகித்தவர். நடந்து முடிந்த தேர்தலில் மொரினா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மனைவி கிரண், 3 குழந்தைகள் உள்ளனர்.
ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத் (64). பீகார் மாநிலம், பாட்னாவில் பிறந்தவர். இவரது தந்தை தாகூர்சிங், ஜனசங்க நிறுவனர்களில் ஒருவர். ரவிசங்கர் பிரசாத், எம்.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்றவர். அத்வானிக்காக வழக்குகளில் வாதாடிய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலாக திகழ்ந்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தார். முந்தைய மோடி அரசில் சட்டம், நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். இந்த பாராளுமன்ற தேர்தலில் பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளராக நின்ற நடிகர் சத்ருகன் சின்காவை வீழ்த்தியவர். மனைவி மாயா.
ஹர்சிம்ரத் கவுர் பாதல்
ஹர்சிம்ரத் கவுர் பாதல் (52). சண்டிகாரில் பிறந்தவர். சிரோமணி அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மருமகள். இவரது கணவர் சுக்பீர்சிங் பாதல். 2009, 2014, 2019 என 3 முறை பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார். முந்தைய மோடி அரசில் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் சுக்பீர்சிங் பாதல், 3 குழந்தைகள் உள்ளனர்.
தாவர் சந்த் கெலாட்
தாவர் சந்த் கெலாட் (71), மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் பிறந்தவர். பா.ஜனதா கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த தலைவர். முந்தைய மோடி அரசில் சமூக நீதித்துறை மந்திரி பதவி வகித்தார். மனைவி அனிதா. 4 குழந்தைகள் உள்ளனர்.
ரமேஷ் பொக்ரியால்
ரமேஷ் பொக்ரியால் (59), உத்தரகாண்ட் மாநிலம் பினானியில் பிறந்தவர். பி.எச்.டி மற்றும் டி.லிட் டாக்டர் பட்டங்கள் பெற்றவர். அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் ரமேஷ் பொக்ரியால். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மாநில முதல்-மந்திரி பதவி வகித்தவர். 2014, 2019 தேர்தல்களில் ஹரித்துவாரில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்றவர். மனைவி குசும் காந்தா, 3 மகள்கள் உள்ளனர். மத்திய மந்திரி பதவிக்கு புதியவர்.
அர்ஜூன் முண்டா
அர்ஜூன் முண்டா (51), ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்து தேசிய பொதுச்செயலாளராக விளங்கியவர். 2010-13 காலகட்டத்தில் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி பதவி வகித்துள்ளார். ஜாம்ஷெட்பூர் எம்.பி.யான இவர் முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மீரா என்ற மனைவி உள்ளார்.
ஸ்மிரிதி இரானி (43), டெல்லியில் பிறந்தவர். டி.வி. தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். மராட்டிய மாநில பா.ஜனதா இளைஞர் அணி துணைத்தலைவர் பதவி வகித்தவர். பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவர் பதவியும் வகித்திருக்கிறார். 2004 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினிசவுக்கில் காங்கிரஸ் தலைவர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டார். 2014 தேர்தலில் அமேதியில் ராகுல்காந்தியை எதிர்த்து களம் கண்டு தோற்றார். இந்த தேர்தலில் அவர் அதே தொகுதியில் ராகுலை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தார். முந்தைய மோடி அரசில் ஜவுளித்துறை மந்திரி பதவி வகித்தார். கணவர் ஜூபின் இரானியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஹர்சவர்தன்
ஹர்சவர்தன் (64), டெல்லியில் பிறந்தவர். எம்.எஸ். பட்டம் பெற்ற மருத்துவ நிபுணர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். டெல்லி மாநில மந்திரி பதவி வகித்தவர். டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். முந்தைய மோடி அரசில் சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி நுட்டன், 3 குழந்தைகள் உள்ளனர்.
பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர் (68), மராட்டிய மாநிலம், புனே நகரில் பிறந்தவர். பா.ஜனதாகட்சி இளைஞர் அணியில் சேர்ந்து பணியாற்றியவர். மாணவர் இயக்கங்களில் பணியாற்றியவர். மராட்டியத்தில் எம்.எல்.சி. பதவி வகித்தவர். முதலில் மராட்டியம், பின்னர் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் முக்கிய துறையான மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பதவி வகித்தவர். மனைவி பிரசீ, 2 குழந்தைகள் உள்ளனர். 2 மகன்கள். ஒருவர் பல் மருத்துவர். மற்றொருவர் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
பியூஸ் கோயல்
பியூஸ் கோயல் (54), மராட்டிய மாநிலம், மும்பையில் பிறந்தவர். பா.ஜனதா தேசிய பொருளாளராக விளங்கியவர். மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். முந்தைய மோடி அரசில் நிலக்கரி, சுரங்கம், ரெயில்வே, நிதி என பல துறைகளில் மந்திரி பதவி வகித்துள்ளார். இவரது தந்தை வேதபிரகாஷ் கோயல், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரியாக இருந்தவர். பியூஸ் கோயலுக்கு மனைவி சீமாவும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான் (49). ஒடிசா மாநிலம் டல்சேரில் பிறந்தவர். எம்.ஏ.பட்டதாரி. ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியாற்றியவர். தந்தை தேவேந்திர பிரதான், மத்தியில் வாஜ்பாய் அரசில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி மந்திரிசபையில் பெட்ரோலிய துறை மந்திரி பதவி வகித்தார். கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி மிருதுளா, 2 குழந்தைகள் உள்ளனர்.
முக்தர் அப்பாஸ் நக்வி
முக்தர் அப்பாஸ் நக்வி (61). உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் (அலகாபாத்) பிறந்தவர். 17 வயதிலேயே நெருக்கடி நிலையின்போது சிறைவாசம் அனுபவித்தவர். வாஜ்பாய் அரசில் தகவல், ஒலிபரப்பு ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். 2016-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார். முந்தைய மோடி அரசில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரியாக இருந்தார். சீமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
பிரகலாத் ஜோஷி
பிரகலாத் ஜோஷி (56), கர்நாடக மாநிலம், பீஜப்பூரில் பிறந்தவர். கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர். 4-வது முறையாக எம்.பி. ஆகி உள்ளார். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார். மனைவி ஜோதி, 3 மகள்கள் உள்ளனர்.
மகேந்திர நாத் பாண்டே
மகேந்திரநாத் பாண்டே (61), உத்தரபிரதேச மாநிலம், பக்காபூரில் பிறந்தவர். எம்.ஏ. இதழியல் பட்டதாரி. முனைவர் பட்டமும் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ்.சில் ஈடுபாடு கொண்டவர். நெருக்கடிநிலை காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். உத்தரபிரதேசத்தில் கல்யாண்சிங் மந்திரிசபையில் மந்திரி பதவி வகித்தவர். முந்தைய மோடி அரசில் மனிதவளத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தார். பின்னர் மாற்றப்பட்டார். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவராக பணியாற்றி வந்தார். மனைவி பிரதிமா, ஒரு மகள் உள்ளனர்.
அரவிந்த் சாவந்த்
அரவிந்த் சாவந்த் (67), மும்பையில் பிறந்தவர். சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவர். 2014, 2019 தேர்தல்களில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை வீழ்த்தியவர். மனைவி அனுயா சாவந்த். முதல் முறையாக மத்திய மந்திரி ஆகி உள்ளார்.
கிரிராஜ் சிங்
கிரிராஜ் சிங் (66), பீகார், பர்ஹியாவில் பிறந்தவர். பீகாரில் பல்வேறு துறைகளில் மந்திரி பதவி வகித்தவர். கடந்த தேர்தலில் நவாடா பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். முந்தைய மோடி அரசில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி பதவி வகித்தார். இந்த தேர்தலில் பெகுசாராய் தொகுதியில் மாணவர் தலைவர் கன்னையா குமாரை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். உமா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
கஜேந்திர சிங் செகாவத்
கஜேந்திரசிங் செகாவத் (51), ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் பிறந்தவர். எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக விளங்கியவர். கடந்த 2014 தேர்தலில் ஜோத்பூரில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர். இப்போதும் அதே தொகுதியில் வென்றுள்ளார். முந்தைய மோடி அரசில் விவசாயத்துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்தவர். மனைவி நானன்த் கன்வார், 3 குழந்தைகள் உள்ளனர். இந்த 22 பேருடன் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 பேரும் கேபினட் மந்திரிகள் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்