search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biren Singh"

    • 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.
    • இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது

    மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

     

    இந்நிலையில் கடந்த வருடம் நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் அதிர்வலையை ஏற்படுத்தியதை போல தற்போதைய மணிப்பூர் சூழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மணிப்பூர் குறித்து  எக்ஸ் பக்கத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    தனது பதிவில், மணிப்பூர் சூழலுக்கு முதல்-மந்திரி பைரோன் சிங் திறமையின்மைதான் காரணம் என்றும் தற்போது 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு ப.சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தார். அப்போது மணிப்பூரில் இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப.சிதம்பரம் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டவரான தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மி என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார்.

    தற்போது மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்ட விரோதமாக மியான்மரில் இருந்து குடியேற்றங்கள் நடந்ததுதான். இதற்கு காரணமாக இருந்தது ப.சிதம்பரம்தான். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டினார்.

     

    இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஒக்ராம் இபோபி சிங்கும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கார்கேவிடமும் புகார் கூறினார். இதையடுத்து கார்கேவும் தலையிட்டார். எனவே ப.சிதம்பரம் தனது பதிவை நீக்கினார். 

    • மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம்.
    • அரசு விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.

    மாநில மக்களின் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த பிறகு, முதலமைச்சர் பைரன் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பின் போது, மாநிலம் தொடர்பாக மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். மணிப்பூர் மக்கள் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.


     

    கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இது தொடர்பான தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்றும் இந்த மோதல் நிலை முடிவுக்கு வராத நிலையில், அவ்வப்போது அம்மாநிலத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.

    இதனிடையே கலவரம் ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நான்கு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். எனினும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் உள்துறை மந்திரி இடையேயான சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. 

    • துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
    • முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

     


    திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

    • லடாக் சென்றிருந்த ராகுல் காந்தி மணிப்பூர் குறித்து பேச்சு
    • மக்கள் உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது

    மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த, அம்மாநில முதல்வர் பிரேன் சிங், இன்று மணிப்பூரில் நடைபெறும் அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இதுகுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    நாங்கள் அவருடைய ஆலோசனையை எப்போதும் எடுத்துக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்டபிறகு மணிப்பூரில் அமைதி நிலவுகிறது. தற்போது இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மற்றும் மீண்டும் குடியேற்றத்திற்கான வழக்கமான பணி. இதற்கான உள்துறை அமைச்சரின் ஆலோசனையைப் பெறவே நாங்கள் வந்துள்ளோம்.

    லடாக்கில் இருக்கும்போது ராகுல் காந்தியால் எப்படி மணிப்பூர் குறித்து நினைக்க முடியும்?. நீங்கள் லடாக் சென்றீர்கள் என்றால், லடாக்கை பற்றி பேச வேண்டும். இன்று மணிப்பூரில் நடப்பது அனைத்தும், காங்கிரசால் உருவாக்கப்பட்டவை. மனித உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது'' என்றார்.

    பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையின்போது, "ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் இருக்கிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதி மட்டுமே தீர்வு. மணிப்பூரில் அமைதி நிலவ மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன" என்றார்.

    • கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
    • 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

    இம்பால் :

    மணிப்பூரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த முகாம்களை மாநில முதல்-மந்திரி பைரேன் சிங் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கலவரத்தால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை தங்கள் சொந்த இடங்களில் தங்க வைப்பதற்கு அரசு ஏற்பாடுகளை செய்யும்வரை அவர்களுக்கு ரெடிமேட் வீடுகளை வழங்க உள்ளது. இதற்காக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். அதற்கான தளவாடங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.

    இந்த தளவாடங்கள் 2 வாரங்களுக்குள் இம்பால் வந்து சேரும் எனக்கூறிய அவர், இந்த வீடுகளை அமைப்பதற்கான இடத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தது குறித்து பைரேன் சிங் கூறுகையில், 'வன்முறையை நிறுத்துங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், ஆயுதங்களுடன் இருக்கும் மெய்தி இனத்தினரையும் கேட்டுக்கொள்கிறேன், தாக்குதல்களை விட்டுவிட்டு அமைதியின் பாதைக்கு திரும்புங்கள். அப்போதுதான் மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வர முடியும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

    • மர்ம கும்பல் திடீரென அங்கு சென்று நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் பந்தலுக்கும் தீவைத்தனர்.
    • தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரன்சிங். இவர் இன்று சரத்சந்திரபூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க இருந்தார். இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    மேலும் மேடையின் முன்பு பொதுமக்கள் அமர நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் திடீரென அங்கு சென்று நாற்காலிகளை அடித்து உடைத்தனர். மேலும் பந்தலுக்கும் தீவைத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீசாரும் அங்கு சென்று மேடைக்கு தீவைத்த கும்பல் யார்? எதற்காக தீவைக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×