என் மலர்
நீங்கள் தேடியது "BIS"
- நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- வருகிற ஏப்ரல் மாதம் முதல் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் போலி தங்க விற்பனையை தடுக்க பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரையை வெளியிட்டு உள்ளது.
இனி நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தங்க விற்பனை அதிகம் நடக்கும் 339 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் முதல் ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு.
- ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை.
ஓசூர்:
ஓசூர் அருகே ஐஎஸ்ஐ முத்திரையை தனியார் நிறுவனம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இந்திய தர நிர்ணய ஆணையத்தின் சென்னை கிளை அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து அதன் அதிகாரிகள் குழு ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி கெபாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தி மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 155 எண்ணிக்கையிலான மோட்டார் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்திய தர நிர்ணயச் சட்டம், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.