search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bishan Bedi"

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும் பும்ரா, நிதிஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் பும்ரா 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 47 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் பிஷன் சிங் பேடியின் சாதனையை பும்ரா (32) முறியடித்துள்ளார். 

    1977/1978 -ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

    ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள்

    32* 2024/25-ல் ஜஸ்பிரித் பும்ரா

    1977/78-ல் 31 பிஷன் பேடி

    1977/78-ல் 28 பிஎஸ் சந்திரசேகர்

    1967/68-ல் 25 இஏஎஸ் பிரசன்னா

    1991/92-ல் 25 கபில் தேவ் 

    டெஸ்ட் போட்டிதான் கிரிட்கெட்டில் எப்போதுமே சிறந்தது என்பதை இங்கிலாந்து, இந்தியா உலககிற்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று பிஷன் பேடி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பெடி. இவர் 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றப்படும் என்று நம்புகிறார்.

    இதுகுறித்து பிஷன் பெடி கூறுகையில் ‘‘என்னுடைய தத்துவம் மிகவும் எளிதானது. நான் சிறந்தவன் என்று நம்புவேன். ஆனால், நான் எப்போதுமே அதற்காக மோசகமாக தயாராகியுள்ளேன்.

    என்னுடைய வாழ்நாள் முடியும் வரை டெஸ்ட் கிரிக்கெட் சாகாது என்று நம்புகிறேன். இந்த கருத்து செழித்து வளர வேண்டும். இது கிரிக்கெட்டை உயிரோடு வைக்கும். கிரிக்கெட் விளையாட்டு அதன் தன்மையை இழந்து விடக்கூடாது என்பதைதான் நாம் எதிர்பார்க்கிறோம்.



    கிரிக்கெட்டில் என்ன செய்துள்ளோம் என்பதை மற்ற போட்டிகளுடன் நாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா?. மக்களுக்கு கோல்ஃப் விளையாட்டை பார்க்க நேரமில்லை. அதனால் 18 ஹொல்ஸில் இருந்து 3 ஹொல்ஸாக குறைக்கலாமா?. இது நடக்கக்கூடாது. இது கால்பந்து போட்டியிலும் நடக்காது. எந்தவொரு போட்டியிலும் நடக்கக்கூடாது.

    கிரிக்கெட்டின் அடிப்படை தன்மை என்னவென்றால், நிதானமாக ஐந்து நாட்களுக்கு மேல் விளையாட வேண்டும் என்பதுதான். கிரிக்கெட்டை கெடுக்கும் டி20 அல்லது 100 பந்துகள் போட்டி அல்ல. இது கேலிக்கூத்தானது. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஏன் சிறந்தது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்த வேண்டியது தேவையானது’’ என்றார்.
    ×