search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bishan Singh Bedi"

    • பிஷன்சிங் பெடி 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • 1990-களில் பிஷன்சிங் பெடி இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார்.

    இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன்சிங் பெடி. இவர் வெங்கட்ராகவன், பி.எஸ்.சந்திரசேகர், பிரசன்னா ஆகியோருடன் இணைந்து சுழற்பந்தில் கலக்கியவர் ஆவார்.

    பிஷன்சிங் பெடி நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 ஆகும்.

    பிஷன்சிங் பெடி மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிஷன்சிங் பெடி 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் 67 டெஸ்டில் விளையாடி 266 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 98 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது பெடியின் சிறந்த பந்து வீச்சாகும். ஒரு டெஸ்டில் 194 ரன் கொடுத்து 10 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும். 14 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

    10 ஒருநாள் போட்டியில் விளையாடி 7 விக்கெட் எடுத்தவர். இடதுகை சுழற்பந்து வீரரான அவர் இந்திய அணிக்காக 22 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார்.

    1990-களில் பிஷன்சிங் பெடி இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருந்தார். 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2004-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதையும் பெற்று இருந்தார்.

    • அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு பிஷன் சிங் பேடி எடுத்துக்காட்டாக திகழ்வார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான எக்ஸ் பதிவில், "ஸ்ரீ பிஷன் சிங் பேடி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து கவலையுற்றேன். விளையாட்டின் மீது அவர் கொண்டிருந்த காதல், அவரது அசாத்திய பந்துவீச்சால் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவர் தொடர்ந்து எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார். அவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இடதுகை சுழற் பந்துவீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967 முதல் 1979 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் 22 போட்டிகளில் அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

    67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பிஷன் சிங் பேடிக்கு மத்திய அரசு கடந்த 1970-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    எம்எஸ் டோனிக்கு கடைசி 2 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவனுமான பி‌ஷன் சிங் பெடி கருத்து தெரிவித்துள்ளார். #BishanSinghBedi #MSDhoni
    புதுடெல்லி:

    கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக நேசிக்கப்படுபவர் டோனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டார்.

    டோனி இல்லாமல் இந்திய அணி விக்கெட் கீப்பிங் திணறியது தெளிவாக தெரிந்தது. இளம் வீரரான ரிசப்பந்த் கீப்பிங்கில் சில வாய்ப்புகளை கோட்டை விட்டார்.

    இந்த நிலையில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பவனுமான பி‌ஷன் சிங் பெடி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கிரிக்கெட் வாரியத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து பெடி கூறியதாவது:-

    டோனிக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக நான் யார் மீதும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஆச்சரியமானது.

    டோனி இல்லாதது இந்திய அணியில் பாதிப்பை வெளிப்படுத்தியது. விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் மைதானத்திலும் இது எதிரொலித்தது. அவர் அணிக்கு பாதி கேப்டன் போல் திகழ்கிறார்.

    டோனி இளம் வீரர் இல்லை. ஆனாலும் அவர் அணிக்கு தேவைப்படுகிறார். அணியை அமைதிப்படுத்தும் தன்மை அவரிடம் உள்ளது. கேப்டன் கோலியும் அவரை சாந்துள்ளார். டோனி இல்லாததால் அவர் கடினத்தன்மையுடன் இருந்தார். இது நல்லதல்ல இந்திய அணியில் தேவையில்லாமல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    உலககோப்பைக்கு இன்னும் 2½ மாதங்களே உள்ளன. கடந்த ஒரு ஆண்டாகவே இந்திய அணி நிர்வாகம் சோதனை செய்து வருகிறது. வருகிற 23-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டி கடும் சிக்கலை ஏற்படுத்தும். ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜாவை ஒரங் கட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. ரிசப்பந்த்க்கு பல்வேறு அறிவுரைகள் தேவை. ஏற்கனவே செய்த தவறுகளை அவர் தொடர்கிறார்.

    இவ்வாறு பெடி கூறியுள்ளார். #BishanSinghBedi #MSDhoni
    விராட் கோலி தனது இஷ்டத்துக்கு ஏற்றப்படியும், விருப்பப்படியும் செயல்படுகிறார் என்று பி‌ஷன்சிங் பெடி குற்றம் சாட்டியுள்ளார். #ViratKohli

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக திகழ்ந்துள்ளார்.

    ரன்மெஷின் சிங் என்று அழைக்கப்படும் அவர் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

    விராட் கோலி தனது முழு அதிகாரத்தையும் தனிநபர் ஆட்சி போல் செயல்படுத்துவது தவறு என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.

    பயிற்சியாளர் விவகாரத்தில் அவர் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியது உதாரணத்துக்கு ஒன்றாகும்.

    இந்த நிலையில் விராட் கோலியை முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம் பவான்களில் ஒருவருமான பி‌ஷன்சிங் பெடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

     


    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு நபர் (விராட்கோலி) தனது இஷ்டத்துக்கு ஏற்றப்படியும், விருப்பப்படியும் செயல்படுகிறார். நாமும் அவரை விட்டுக் கொண்டு இருக்கிறோம். வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

    அணில் கும்ப்ளே விவகாரத்தில் அணில் என்ன கூறி இருக்க போகிறார். ஆனால் அவர் பெருந்தன்மையாக அப்படியே அதனை விட்டு விட்டார்.

    தற்போதுள்ள இந்திய அணி நன்றாக இருக்கிறது. ஆனால் நமது அணி ஒருநபரால் தான் ஆனது. அனைத்தும் கோலிதான்.

    அவர் மீது அதிகமான கவனம் இருந்தால் எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும். ஒரு கேப்டனாக, ஒரு வீரராக அவர் மீது நாம் கடும் அழுத்தங்களை ஏற்படுத்துகிறோம்.

    இவ்வாறு பி‌ஷன்சிங் பெடி கூறினார்.

    கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே 2017-ம் ஆண்டு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது. #ViratKohli

    ×