என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Flag Protest"

    • நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.
    • தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் ஊராட்சி சவுளுகொட்டாய், பூசாரி கொட்டாய், சின்ன பாளேத்தோட்டம் மற்றும் மொளுகனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தார்சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த தார் சாலையானது தற்பொழுது வருவாய் துறை அதிகாரிகள் இந்த பாதையானது நீர் வழிப்பாதையெனவும் இந்த தார் சாலையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கிராமங்களுக்கு செல்ல வேறுமாற்று பாதை இல்லாத நிலையில் தற்பொழுது கிராம மக்களுக்கு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தார் சாலையை தூர்வாரி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊரின் முகப்பு வரை கால்வாய் தூர்வாரும் பணியானது முடிவுற்ற நிலையில் தற்போது கிராம மக்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையில் தூர்வார அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    கிராம மக்கள் மாற்று பாதை அமைத்து தந்த பின்னரே கால்வாயினை தூர்வார வேண்டும் என நூதன முறையில் வீடுகளின் முன்பும், தெருக்களின் முன்பும் கருப்பு கொடியினை கட்டி தற்பொழுது கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    வீடுகளில் முன்பு கருப்பு கொடிகளை கட்டி பாதை கேட்டு போராட்டம் நடத்தி வரும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் விரைந்து பாதைக்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

    திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும் என்று அவைத்தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
    திருப்பூர்:

    ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) அரசு விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வருகிறார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடத்தப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை பிரதமர் பார்க்க வரவில்லை. ஆனால் அரசு விழா என்ற பெயரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். எங்களது கருப்புக்கொடி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #PMModi
    நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு நாமக்கல்லுக்கு வருகை தந்த அவரை கலெக்டர் ஆசியா மரியம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் கவர்னர் இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது மணிக்கூண்டு, அண்ணாசிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலு, நவலடி, மாநில துணை தலைவர் ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, சரஸ்வதி, ராணா ஆனந்த் உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    தி.மு.க.வினரின் கருப்பு கொடி போராட்டத்தின் மத்தியிலேயே சாலையில் திரண்டு இருந்த பொதுமக்களை நோக்கி கவர்னர் தனது கைகளை அசைத்தபடி காரில் சென்றார்.



    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது போலீஸ் அதிகாரிகள் சென்று, நீங்கள் அனுமதி பெறாமல் இங்கே ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். கவர்னர் ஆய்வு செய்வதற்கு எதிராக கோ‌ஷம் எழுப்புகிறீர்கள். எனவே உங்களை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் கைது செய்கிறோம் என்றனர்.

    இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மேலும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் கவர்னரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது. அதுபோல் கவர்னர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து நாமக்கல் பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா ரதம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜ், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கலெக்டர் ஆசியாமரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் கவர்னரை வரவேற்கும் விதமாக நவதானியங்கள் கொண்டு பொம்மை உருவாக்கப்பட்டு இருந்தது.

    இந்த நவதானிய பொம்மையை பார்த்து கவர்னர் மகிழ்ச்சி அடைந்து, துறை ஊழியர்களை பாராட்டினார். பின்னர் தனியார் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    பிற்பகலில் பயணியர் சுற்றுலா மாளிகையில் அவர் விவசாயிகள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மாலையில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார்.
    விருதுநகருக்கு ஆளுநர் சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தையும் தொடங்கி வைத்து வருகிறார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விருதுநகர் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.



    இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்கு முன் ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது "போலீஸ்ராஜ்யம்"தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விருதுநகரில் ஆளுநருக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் தான் தி.மு.க.வினரை காவல்துறை கைது செய்தது என தெரிவித்துள்ளார். #BlackFlagProtest #TNGovernor #DMKProtest

    ×