என் மலர்
நீங்கள் தேடியது "Bladder Cancer"
- பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
- பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று சிறுநீர்ப்பை புற்றுநோய். இது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 4-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
பல சந்தர்ப்பங்களில், சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், நோய் கடுமையானதாகி மரணம் ஏற்படுகிறது.
அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்தப் பிரச்சனை எழுகிறது. எனவே, பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
டோனி ஹண்டர் தலைமையிலான அமெரிக்காவின் சால்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதில் தீவிர கவனம் செலுத்தினர். இது குறித்து புதிய ஆராய்ச்சி செய்தனர்.
இதில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய அணுகுமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நோய் தாக்குதலுக்கான சில இலக்குகள் அடையாளம் காணப்பட்டன.
கொழுப்பை குறைக்க தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டேடின் வகை மருந்துகளில் ஒரு பரிசோதனை மருந்தை சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட கலவையால் இந்த வகை புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்தது. இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.