search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bldg"

    • 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.
    • வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.48 கோடி செலவில் கட்டிடம்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, அணுமின் நிலையம் சார்பில் அதன் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1கோடியே 48 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது.


    இதன் திறப்பு விழா வெங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, ஆகியோர் பங்கேற்று, வகுப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர்.

    நிகழ்ச்சியில் அனுமின் நிலைய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.
    • இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொட்க்கப்பள்ளி மற்றும் இடையிறுப்பு ஊராட்சி மணப்படுகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதிமேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழுதலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யாராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி மற்றும்மாநிலங்கள் அவை உறுப்பினர் எம்.சண்முகம் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தனர். இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதாகார்த்திகேயன், பேரூராட்சி துணைதலைவர் பொன்னழகு சீனு. வார்டு உறுப்பினர் புனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபேபி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×