என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bokline apparatus"
- போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.
அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகள் திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என்றனர்.
- இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அம்மாபேட்டை வட்டத்தில் நெடுந்தெரு பகுதியில் தேவரா யன்பேட்டை வாய்க்கால், காவளூர் பகுதியில் வடக்குராஜன், தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் வெட்டாற்றை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.
அப்போது கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 1068 கி.மீ. நீளத்துக்கு 189 பணிகள் தூர்வாருவதற்காக எடுத்து கொள்ளப்பட்டது. இந்த பணிகளுக்காக 240 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேவைகேற்ப பொக்லைன் எந்திரங்கள் அதிகரிக்கப்படும்.
மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற் பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியா ளர்கள் செல்வபாரதி, சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த வளவனூர் பகுதியில் பாலாற்று படுகையில் மணல் அள்ள அரசு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாலாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையிலான பொதுமக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி, பொக் லைன் எந்திரத்தை சிறை பிடித்து முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் மணல் அள்ளக்கூடாது. மீறி மணல் எடுத்தால் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொக் லைன் எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த திடீர் முற்றுகை போராட்டத்தினால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்