search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bonfire"

    • பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
    • ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது.

    அசாமில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் குளிர் தாங்க முடியாததால் வரட்டியை தீமூட்டி குளிர்காய்ந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

    டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து அலிகரில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரெயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரெயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதே நேரத்தில், ஓடும் ரெயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரெயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

    பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

    மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

    • இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி நடவடிக்கை.
    • நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் எரித்தனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது.

    இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் தீயிட்டு எரித்தன.

    இதுகுறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் கூறுகையில், "இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" என்று கூறினார்.

    இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபார் அதிகாரிகள் எதிர்த்தனர்.

    இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்தது.

    • மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

    • தொண்டி அருகே உப்பூர் விநாயகர் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்தனர்.
    • பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெயிலுக்கு உகந்த விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. ராமன் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இந்த விநாயகப்பெருமானின் அருள் பெற்று சென்றதாக கூறப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் கடலில் தீர்த்தமாடி கோவில் முன்பு வளர்க்கப்பட்ட தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தைகளை கையில் ஏந்தியவாறு பக்தர்கள் பலர் தீ மிதித்தது மெய் சிலிர்க்க வைத்தது.

    பொதுவாக அம்மன் கோவில், முருகன் கோவில்களில் தீமிதிப்பது வழக்கம். ஆனால் இங்கு விநாயகப்பெருமானை வேண்டி விரதமிருந்து பக்தர்கள் தீமிதிப்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    ×