என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "border issue"

    • தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
    • நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

    சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


    உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.

    மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.
    • எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    பீஜிங் :

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார்.

    இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 ஆண்டுக்கு பின் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.
    • சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா இடையே உள்ள 3,488 கி.மீ. எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    கடந்த காலங்களில் இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 22 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசி கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5 ஆண்டுக்கு பின், சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயைச் சந்தித்துப் பேசியது.

    அப்போது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தபோது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களைச் செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

    • சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது.
    • பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

    இதேபோல், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் அரசாணை வெளியிடப்பட்டது.

    16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, பொது மக்கள் 6 வாரங்களில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ஆட்சேபனைகள் அனைத்தும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலாகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
    • சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

    டாக்கா:

    இந்தியா-வங்கதேசம் நாடுகல் 4,096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5-வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.

    வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.

    இதையடுத்து, டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

    இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

    • இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.
    • ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய எல்லைபகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக அமெரிக்க ரானுவ அதிகாரி தெரிவித்து இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    தனது படைகளின் எண்ணிக்கையையும் சீனா அதிகரித்து வருகிறது. பதட்டத்தை தவிர்க்க அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாக இந்திய ரானுவ தளபதி நரவானே தெரிவித்து இருந்தார் ஆனாலும் சீனா தனது அத்துமீறலை தொடர்ந்து செய்து வருகிறது.

    இந்தநிலையில் ராகுல் காந்தி எம்.பி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பது எதிகாலத்தில் மோதல் நடவடிக்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும்.

    ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை சீனா மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் அமெரிக்கா அதிகாரி கூறிய கருத்து களையும் சுட்டிகாட்டி உள்ளார்.

    ரமல்லா என்கிற இடத்தில் பாலஸ்தீன சிறுவன் கத்தியால் குத்தியதில் இஸ்ரேலியர்கள் 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
    ஜெருசலம் :

    இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள் காரை மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    அப்படி தாக்குதலில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினரோ அல்லது போலீசாரோ சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.

    இந்த நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள ரமல்லா என்கிற இடத்தில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த 17 வயதான பாலஸ்தீன சிறுவன், அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான்.

    இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுவன் கத்தியால் குத்தியதில் இஸ்ரேலியர்கள் 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    இதையடுத்து, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சிறுவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

    இதற்கிடையே தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி 31 வயதான வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இருவரில் 50 வயதான நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பாலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து ரமல்லா அருகே உள்ள கோபர் கிராமத்தில் பாலஸ்தீன வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புபடையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 
    ×