என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boycotted"
- குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
- கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
நெல்லை:
குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் அலவந்தான்குளம் கிராம மக்கள் இன்று கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் கிராமசபை கூட்டம் நடந்த பகுதி முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்காக சிப்காட் மூலம் அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிந்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே அதனை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்
- வக்கீல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வக்கீல் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஈரோடு:
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சாமிநாதன் (37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 2000 வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்