search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Branch"

    • எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்
    • பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    பொதுவாகாவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் காக்க வைப்பதாகவும் வங்கி வேலைகள் ஆமை வேகத்தில் நகர்வதாகவும் சாமானிய மக்களிடம் பொதுக்கருத்து நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி அல்லாத மொழி மாநிலங்களின் வங்கி காசோலை மற்றும் பிற தகவல்கள் அம்மாநில மொழிகளில் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து சர்ச்சையாவதுண்டு.

    அந்த வகையில் இந்தியாவின் பிரதான பொதுத்துறை வங்கியாக விளங்கும் பாரத ஸ்டேட் வங்கி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றிற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துகலையாகக் கிடந்த வங்கி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து, மதியம் 3 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் இடைவேளைக்கு சென்றுள்ளனர் என்றும் உலகமே மாறினாலும் உங்கள் சேவைகளின் தரம் இந்த அளவில் தான் உள்ளது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ, வங்கிக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரச்சனையை சரி செய்யாமல் பிரச்னையை சுட்டிக்காட்டிய நபருக்கு எச்சரிக்கை விடுப்பது ஏற்புடையது அல்ல என்று எஸ்பிஐ வங்கிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அந்த நபரின் பதிவுக்கு எஸ்பிஐ வங்கி அளித்த ரிப்ளையை டேக் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள எஸ்பிஐ கிளை எங்கு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட தாமதம் செய்ததால் எஸ்பிஐ வங்கி சர்ச்சையில் சிக்கியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நன்கொடையாளர்கள் பெயர்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கி புதிய கிளை தொடக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் பெடரல் வங்கியின் புதிய கிளையை எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் மண்டல மேலாளர் ஸ்ரீ வருண், டாக்டர் அரவிந்தராஜ், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் ஒரு லட்ச ரூபாய்க்கான டெபாசிட் தொகையை முதன் முதலில் வழங்கினார். வள்ளல் பாரி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வங்கியின் மூலமாக தண்ணீர் சுத்திகரிக்கும் எந்திரம் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.

    மேலும் ராமநாதபுரம் குமரன் நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்கி மேலாளர் சண்முகபிரியன் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர், வெங்கமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி வேலூர் வட்டார கிளை கூட்டம் மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் வரவேற்றார்.

    பரமத்தி ஒன்றிய தலைவர் ரங்கசாமி, பரமத்தி ஒன்றிய பொருளாளர் பத்மாவதி, கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் சங்கர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் முருக செல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு தொடர வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை மற்றும் சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வரும் 14-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெறும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பரமத்தி ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

    ×