என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Breakfast Plan"
- உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்
- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கலெக்டர் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சு மிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க பள்ளிகளில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கம்மவா ர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் காலை உணவை பார்வை யிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
மேலும் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்
- ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது என்றார்
வேலூர்:
வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் ஜாப்ரா பேட்டை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் செயல்ப டுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திடீரென ஆய்வு செய்தார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? நன்றாக இருக்கிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சரால் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளி களில் தொடங்கப்பட்டு அதனை கிராமப்புற பள்ளி களிலும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது. மாணவர்களிடம் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு திட்டம் தொடங்கபட்ட பின்னர் தலைமை ஆசிரி யர்களும், மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது.
மாணவர்கள் வருகையும் உயர்ந்துள்ளது. உதயசூ ரியனை கைகளால் மறைக்க முடியாது. முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களிடத்திலும் மீண்டும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.
முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
- மேம்பாலம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முன்தினம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை வழங்கிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நெமிலி ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது .
நெமிலி கல்லாறில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஒன்றிய பொறியாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
- கீழக்கரையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காலை உணவு விரிவாக்க திட்டம் புதிய கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா திட்டத்தை தொடங்கி வைத்தார். மறவர் தெரு, முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு விரிவாக்க திட்டத்தை செஹானஸ் ஆபிதா தொடங்கி வைத்தார்.
நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாதுஷா, சக்கினா பேகம், காயத்ரி, ஜெயலெட்சுமி, சூர்ய கலா, சித்திக், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, கீழக்கரை நகர் தி.மு.க செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்னதாம்பல் செருவு ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அரசின் காலை உணவு திட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.பிரியா வடிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜமார்த்தாண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்தரசி, பாரதிராஜா, வயலட் மகேந்திரன், கோவிந்தராஜ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குண்டல பள்ளி ஏ.எஸ்.ராஜி சிவகுமார் ஊராட்சி செயலாளர் சி அனிதா ஃபுல் படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அம்மாபட்டி அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
- அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். துணை தலைமை யாசிரியர் பாண்டி வரவேற்றார்.
மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது படிப்பு முடித்து பெரிய பதவிகளுக்கு வருகின்றனர். மாண வர்களின் மருத்துவ படிப்புக்கு தடையாக உள்ள நீட் தேர்வினை ரத்து செய்ய தமிழக முதல்வர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார். முடிவில் ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.
திருமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ஆலம்பட்டி சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ஜெய ராஜ், ஒன்றிய துணை செயலாளர் முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல அமைப்பா ளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப் பொரு ளாளர் சின்னச்சாமி, நகராட்சி கவுன்சிலர் திருக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை நகர்மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்.
- நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சியில் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி, முகமதுஷாபுரம் தொடக்கப்பள்ளி, வேங்கட சமுத்திரம் தொடக்கப் பள்ளி, தெற்குதெரு பள்ளி, சத்திரம் தொடக்கப்பள்ளி மற்றும் முஸ்லீம் பெண்கள் பள்ளி ஆகிய 6 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 209 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் செங்குளம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் நித்யா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப்பொருளாளர் சின்னச்சாமி, கவுன்சிலா்கள் திருக்குமார், ரம்ஜான் பேகம் ஜாகீர் உசேன், அமுதா சரவணன், நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், சுகாதார அலுவலர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் பேட்டை அரசு நிலைப்பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
- பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்து தொடங்கி வைத்து மாணவ மாணவியருக்கு உணவுகளை பரிமாறினார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் லலிதா பேபி வரவேற்றார். சமுதாய வள பயிற்றுனர் செல்வி, வரி தண்டலர்கள் வெங்கடேசன் கண்ணதாசன், பள்ளி மேலாண்மை குழு ரமேஷ், பேரூராட்சி பணியாளர்கள் வேணுகோபால், கவுதம் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காலை உணவு விரிவாக்க திட்டத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சேத்தூர் பேரூராட்சி யிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட உயர்தர (ஸ்மார்ட்) வகுப்பறையை இருவரும் தொடங்கி வைத்தனர்.
விழாவில் தலைமை ஆசிரியர் லட்சுமி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிர மணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமார், ராமமூர்த்தி செயல் அலுவலர் சந்திராகலா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், துணை சேர்மன்கள் துரை கற்பக ராஜ், காளீஸ்வரி, மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கிளை செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், சீதாராமன், வைரவன், மகளிரணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார்.
கொடைரோடு:
கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிலக்கோட்டை தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.பள்ளித் தலைமை ஆசிரியை ஆனந்தகுமாரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு காலை உணவுகளை வழங்கி பேசினார். மேலும் பள்ளபட்டி, மெட்டூர், ஊத்துப்பட்டி பகுதியில் நேர, முழு நேர ரேசன் கடைகளை வேலுச்சாமி எம்.பி திறந்து வைத்தார். இந்த விழாவில் நிலக்கோட்டை தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டன், பள்ளபட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் நெடுமாறன், வெள்ளிமலை,தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், ராஜேந்திரன், கருப்பு, பாண்டி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
- பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார்.
பொன்னேரி:
தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்ததையொட்டி அதன் தொடர்ச்சியாக மீஞ்சூர் தேரடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அதற்கான திட்டம் தொடக்க விழா நடை பெற்றது.
இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திட்டத்தை துவக்கி வைத்தார் இதில் கூடுதல் ஆட்சியர், சுபபுத்திரா சப் கலெக்டர் ஐஸ்வர்யா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ், நகர செயலாளர் தமிழ் உதயன், முன்னாள் பேரூர் தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அத்திப்பட்டு ஊராட்சியில் சேர்மன் ரவி சிறுளப்பாக்கம் ஊராட்சி பெரிய வெப்பத்தூர் துவக்க பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா கணேசன், வல்லூரில் தலைவர் உஷா ஜெயகுமார், சீமாபுரம் ஊராட்சியில் தலைவர் நர்மதா யோகேஷ் குமார், தடப் பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பாபு, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் கலாவதி நாகராஜன், ஆகியோர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்