என் மலர்
நீங்கள் தேடியது "Breastfeeding Week Celebration"
- 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும்
- 182 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடந்தது. நிலைய மருத்துவர் (பொறுப்பு) தெ.ரத்தினவேல் தலைமை தாங்கினார். உதவி மருத்துவர் யஷ்வந்த்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் செய்யாறு மூத்த குழந்தை நல மருத்துவர் செந்தில் குமார் கலந்துகொண்டு பேசுகையில்:-
குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடி அறுக்கும் முன்பு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பதால் நச்சுக்கொடி விரைவில் பிரியும், கருப்பை சுருங்க ஆரம்பிக்கும். மேலும் சுகப்பிரசவம் என்றால் 2 மணி நேரத்துக்குள், சிசேரியன் என்றால் 4 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தனியார் வேலைக்கு செல்லும் பெண்கள் நலனுக்காக இ.எஸ்.ஐ. மூலமாக 182 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது என்றார்.
மேலும் தாய்ப்பால் கொடுப்ப தால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும், தாய்ப்பால் கொடுக்கும் முறை, தாய்மார்கள் உண்ணவேண்டிய உணவுகள் பற்றி கூறினார். முடிவில் உதவி மருத்துவர் அனுசுயா நன்றி கூறினார்.
- 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு ஊக்கப்பரிசு
- உறுதிமொழி எடுத்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலை யத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது. கந்திலி வட்டார மருத்து அலுவலர் தீபா தலைமை தாங்கினார். சேஞ்ச் நிறுவன நிறுவனர் பழனிவேல்சாமி முன்னிலை வகித்தார்.
இதில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல், பணிபுரியும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது டாக்டர் தீபா குழந் தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த உணவாகும், இது பாதுகாப் பானது, சுத்தமானது, குழந்தைகளை நோய்களிலிருந்து பாது காக்க உதவும். எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது. 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தாய்ப்பா லின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.
இதில் 2 வருடம் வரை தாய்ப்பால் கொடுத்த தாய்மார்க ளுக்கு ஊக்கப்பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அனைத்து தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
- ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் நேற்று மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
இதில் மேல்நகர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குழந்தைகளின் வளர்ச்சி குறித்தும் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்தை குறித்தும் உணவுகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான ஆலோசனைகளை பெற்றனர்.
தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று உணவுகள் காய்கறிகள் பழ வகைகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் சத்து பாயாசங்கள் வழங்கப்பட்டன.
- தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- ஊர்வலத்தில் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போஷான் அபியான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஜெயங்கொண்ட வட்டாரத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடை பெற்றது.
மேலும் தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் முருகானந்தம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசி வரவேற்று பேசினார்.
விழிப்புணர்வு ஊர்வலமானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அண்ணாசிலைக்கு சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வந்து முடிவடைந்தது.
ஊர்வலத்தில் மேற்பார்வையாளர்கள் வளர்மதி, நவமணி, சத்தியபாமா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.
முடிவில் வட்டார திட்ட உதவியாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.