என் மலர்
நீங்கள் தேடியது "Brother-sister"
- யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
- ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சேலம்- கோவை பைபாஸ் ரோடு வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள நசியனூர் கவுண்டன்பாளை யம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (58). இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், மேனகா, சுதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சமையல் வேலை செய்து வரும் முத்து நசியனூர் மாரியம்மன், மதுர காளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவிலில் பூஜை செய்து வந்தார்.
இவரது தங்கை புஷ்பா (49). இந்த நிலையில் முத்து மற்றும் அவரது தங்கை புஷ்பாவும் மோட்டார் சைக்கிளில் நசியனூர் மேற்கு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் சேலம்- கோவை பைபாஸ் ரோடு நசியனூர் சாமி கவுண்டன் பாளையம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இட த்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஆத்தூரை சேர்ந்த சற்குணம் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.