search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brutality"

    • குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.
    • பட்டியலின பெண் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூரில் அரசுப் பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண் உணவு சமைத்ததால், அதனை சாப்பிட விடாமல் தடுத்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை கேட்டு சிலா் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனா்.

    பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் சத்துணவு சமைக்கக் கூடாது என்றும், அவா் சமைக்கும் உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் சிலா் பிரச்சினைகள் செய்வது ஏற்புடையதல்ல.

    எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உணவை சாப்பிட விடாமல் தடுத்தவா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
    • முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது .

    கடலூர்:

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்  கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இருந்த2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

    மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.  இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது.    அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு படும் இடங்களில் முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதிய வர்கள் இதன் காரண மாக பதற்றத்துடன் காணப்படு கின்றனர். போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்கைள பிடித்து ேமலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.
    • பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஆணையர் பிரதான் பாபு தலைமையில், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை உறுதிபடுத்துவது, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது என பெண்களுக்கான கோட்பாடுகளை நிலைநாட்டவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே பிரசாரத்தின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவத்தை வளர்ப்போம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம் ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பேரணியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்திகோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரவி, பள்ளி தலைமை ஆசிரியர் தேவகிருபா, ஊராட்சி செயலர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×