என் மலர்
நீங்கள் தேடியது "Budget 2023"
- இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
புதுடெல்லி:
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம். இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவானது.
9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதற்கான ஜி20 நாடுகளின் தலைமைத்துவம் தனித்துவமான ஒரு வாய்ப்பு.
102 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சுற்றுலாவை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளவில் ஏற்றுமதியில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது.
உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
2019-ம் ஆண்டு அருண் ஜெட்லி மறைவுக்கு பிறகு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
நிர்மலா சீதாராமனுடன் இதுவரை 6 பேர் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள்.
முதல் தமிழ் மந்திரி
சுதந்திரம் பெற்றதும் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இந்தியரின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.
கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்தான் இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆவார்.
டி.டி.கிருஷ்ணமாச்சாரி
மத்திய மந்திரியாக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய 4 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில் பொருளியல் துறையில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சி.சுப்பிரமணியம்
1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 3 முறை இந்திராகாந்தி ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரது பூர்வீகம் பொள்ளாச்சி.
ஆர்.வெங்கட்ராமன்
இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1950-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்தவர். தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றியவர்.
இந்தியாவின் 8-வது ஜனாதிபதியாக 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இந்திய அரசியலில் இலங்கை சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் படுகொலை, பங்கு சந்தை ஊழல் என நெருக்கடியான கால கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று வந்த முதல் ஜனாதிபதியும் இவர்தான்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர்களில் அதிக தடவை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் மட்டுமே.
இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 75 பட்ஜெட்டுகளில் 6 தமிழர்கள் 23 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள்.
- அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
- 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள அம்சங்கள்:
- 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு
- புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்
- மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன
- குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும்
- வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு.
- சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்
- 2047-ம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு
- பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
- பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.
- மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு
- சாலை பணிகளுக்காக ரூ.75,000 கோடி ஒதுக்கீடு
- பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்
- ரெயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
- நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்
- மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்
- செயற்கை நுண்ணறிவிற்காக மேன்மைமிகு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளன.
- தரவு மேலாண்மை கொள்கை வகுக்கப்படும்
- 9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
- அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
- மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும்
- பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
- ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்
- பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:
- டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு
- 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன் விஷ்வாஷ் என்ற மசோதா கொண்டு வரப்படும்
- பசுமை எரிசக்தி துறை மேம்பாட்டிற்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு
- லடாக்கில் உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ரூ.20,700 கோடி நிதி ஒதுக்கீடு
- இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரனாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்
- ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்
- நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
- நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்
- சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன
- பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்
- 5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்
- சுற்றுலாவை மேம்படுத்த யூனிட்டி மால்ஸ் என்ற பெயரில் வணிக வளாகங்கள் உருவாக்கப்படும்
- போக்குவரத்து துறைக்கு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு
- சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக ரூ.9000 கோடி நிதி ஒதுக்கீடு
- வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை
- மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும்
- பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் முதலீடு செய்யும் வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்படும்
- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.
- ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும்.
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
பான் கார்டு இனி முக்கிய அரசுத் துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.
ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு
- தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
- நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும்
- நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4சதவீதமாக இருக்கும் என கணிப்பு
- சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைப்பு
- மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு
- தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு
- ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிப்பு
- ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
- நடப்பாண்டு 6.5 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு
- ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
- மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது
புதுடெல்லி:
வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.
மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை
- ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
- ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி
- ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி
- ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி
- ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.
- அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்.
- விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி கூறியதாவது:- அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயனடைவர். புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட் என கூறியுள்ளார்.
- தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
- கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம், சிகரெட் மீதான இறக்குமதி வரி கூடுதலாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது. கிச்சன் சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை உயர்கிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.
- இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை.
- வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை.
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார்.
கடந்த ஆண்டு 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்திய போதிலும், மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு 325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார் கெஜ்ரிவால்.
இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பது துரதிர்ஷ்டவசமானது. சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
- மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மம்தா குற்றச்சாட்டு
- வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது.
போல்பூர்:
மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-
இந்த பட்ஜெட் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதம், மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட். ஒரு வகுப்பினருக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அம்சங்கள் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிப்பது என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
- பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
சென்னை:
மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூடநிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் "தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் New regime (புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, Old regime (பழைய முறைக்கும்) அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய பட்ஜெட் அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.
மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது.
மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும். நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.
பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை (Unit cost) உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ். உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.
மத்திய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக (pilot basis) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில் மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது மத்திய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.