என் மலர்
நீங்கள் தேடியது "building contractor"
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக ஊர் பொதுமக்கள் இடம் கேட்டனர். அதற்கு பெருமாள் சம்மதம் தெரிவித்து 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். கோவிலுக்கு மேலும் இடம் தேவை என்று ஊர்பொதுமக்கள் கேட்டதின் பேரில் மீண்டும் 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தானமாக கொடுத்த 4 சென்ட் இடத்தை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் தட்டி கேட்டார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாலசுப் பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேர் பெருமாளை சரமாறியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து பெருமாளின் மகன் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன், பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் அந்தோணிராஜ். இவர் காரில் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50), கோவிந்தம்மாள், கீதா ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
உச்சிப்புளி அருகே அம்மாச்சி அம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தோணிராஜ் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காரில் இருந்து 3 பெண்களின் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வீரராகவராவ் விபத்து குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Accident #Death