என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bullocks"
- வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.
- மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் தனது திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் காயாமொழியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார். மேலும் மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாகவும் கூறிய மணமகன் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.
- காளைகள், இளங்கன்றுகள் என 66 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
- கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 66 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 45 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே மிகப் பெரிய மாட்டுச்சந்தையாக ஈரோட்டில் மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டதால் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போல் தாராபுரம், திருப்பூர், உசிலம்பட்டி, நத்தம் ஆகிய மாட்டுச்சந்தைகளிலும் மாடுகளுக்கு நோய் காரணமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அனைத்து வியாபாரிகளும் இன்று ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் குவிந்தனர். தென் மாவட்டங்களில் பல சந்தைகள் மூடப்பட்டதாலும், அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வருவதாலும் மாட்டுச்சந்தை களை கட்டியது.
சராசரியாக ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
அதிக பட்சமாக 1 காளை ரூ.1½ லட்சத்துக்கு விலை போனது. நாட்டு மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், கன்றுக்குட்டி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் தீவனங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை இன்று களை கட்டியது. * * * சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்