என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullying"

    • திருச்சியில் காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல் விடுத்தார்
    • தப்பி சென்ற காதலனுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). கல்லூரி மாணவியான இவரும், திருச்சி தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த மாணவி காதலை துண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தனஸ்ரீ உறையூரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த காதலன் பாலமுருகன் என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.தனஸ்ரீ உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கலை நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீஸ்காரர்கள் ராமலிங்கம், அருள்ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர்.பின்னர் கலை நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் அருள்ஜோதியை அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 38) மற்றும் கீர்த்தி வாசன் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கல்லை எடுத்து காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அருள்ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, கீர்த்திவாசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    மதுரை

    பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வேலாயுதம்பாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்
    • பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட்டம் பிடித்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- மலைக்காவல்அய்யன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது55). இவரது மகன் பாலகுமரன் (28). இவர் நேற்று முன் தினம் இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3பேர் பாலக்குமரனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் பாலகுமரனை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாலகுமரன் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது பால குமரனை பார்த்து உன்னை என்னைக்கு இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டோம் என்றுகூறி கொலை மிரட்டல் விடுத்து மூன்று பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு பாலகுமாரனை கரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து பாலமுருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கத்தியால் குத்திக் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று மர்மநபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அரியலூர் ஊராட்சி குழு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர்.எம்.ஏ. பட்டதாரி, கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை எதிர்த்து அ.தி.மு.க.வில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார், பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தஊரான பொய்யாதநல்லூரில் கோவில் பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.அரியலூர் ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியில் சொந்தமான லாட்ஜில் அவர் இருந்துள்ளார். அப்போது 3 பேர் அங்கு வந்துள்ளனர். சந்திரசேகரையும் அவரது டிரைவர்ராக்கியையும் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக சந்திரசேகர்கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கண்ணு, விக்கி என்கிற விக்னேஸ்வரன், சக்தி ஆகிய 3 பேர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதே போல செல்லக்கண்ணு என்பவர்கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகர், ராக்கி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து அரியலூர் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முசிறியில் இளைஞர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • முசிறி போலீசார் நடவடிக்கை

    முசிறி,

    திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பாலகுமார் மகன் ராகுல் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அமர்ந்து இருந்தபோது, உமையாள்புரம் கீழத்தெருவை சேர்ந்த கௌரிதாசன் (28), புதுராஜா (33) ஆகிய இருவரும் குடிபோதையில் ராகுலை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இதனை கண்டி ராகுலின் அண்ணன் ராஜேஷ் தடுத்துள்ளார். அவரை கெளரிதாசன் மற்றும் புதுராஜா இருவரும் சேர்ந்து குவாட்டர் பாட்டிலால் தாக்கியும், மேலும் உடைந்த பாட்டிலில் ராகுலின் உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராகுல் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் கௌரி ராஜன் மற்றும் புதுராஜா கைது செய்யப்பட்டனர்.

    ×