என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "CA exam"
- தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.
- பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.
நாட்டில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவு மற்றும் தொழில்முறை சார்ந்து போட்டி தேர்வு நடத்தும் விதம் அதன் பாடத்திட்டம் என வேறுப்படும். எதுவாயினும், போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுவது பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் கனவு, லட்சியமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவோரம் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தாயை சந்தித்து இருவரும் பரஸ்பரம் ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
இந்த வரிசையில், டெல்லியை சேர்ந்த அமிதா பிரஜாபதி பட்டய கணக்காளர் தேர்வில், தான் தேர்ச்சி பெற்ற சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கடந்த பத்து ஆண்டுகளாக பட்டய கணக்காளர் தேர்வில் போட்டியிட்டு, இப்போது தான் தேர்ச்சி பெற்றதாக பிரஜாபதி தெரிவிதுள்ளார்.
மேலும், தனது குடும்பம் குப்பம் ஒன்றில் வாழ்வதாகவும் தந்தை தேநீர் வியாபாரி என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண் பிள்ளையை பட்டய கணக்காளர் தேர்வு எழுத வைக்க வேண்டாம். எப்படியும் அவள் வேறொரு வீட்டிற்கு சென்றிடுவாள். அவளுக்கு செலவிடுவதற்கு பதில், அந்த தொகையை கொண்டு வேறு எதையாவது செய்யுங்கள் என்று பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.
எனினும், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரஜாபதியை படிக்க வைத்துள்ளனர். அதன்படி பத்து ஆண்டுகள் பெரும் கனவோடு படிப்பில் கவனம் செலுத்திய பிரஜாபதி இந்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பிரஜாபதி தனது தந்தையை கட்டித்தழுவிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
- சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என அமைச்சர் பதிவு.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது நமக்கு கண்ணீரே வந்துவிடும். அந்தவகையில் தான் இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
47 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவிலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. டோம்பிரீலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நீரா தோம்பரே. இவர் அந்த பகுதியில் 25 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் யோகேசை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தாயின் கடின உழைப்பை உணர்ந்து நன்றாக படித்த யோகேஷ் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தேர்வு முடிவு வந்ததும் மகிழ்ச்சி அடைந்த யோகேஷ் நேராக தனது தாயின் காய்கறி கடைக்கு சென்று தனது சாதனையை கூறினார். மேலும் தனது தாய்க்கு அழகான சேலையையும் வழங்கினார். அப்போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்த நீரா தோம்பரே மகனை கட்டி அணைத்து வாழ்த்தினார். அப்போது அவரது கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் ரவீந்திர சவாண் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இத்துடன், "மனவுறுதி மற்றும் கடின உழைப்பின் வலிமையால், யோகேஷ் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தாயின் ஆனந்தக் கண்ணீர் கோடிக்கணக்கில் மதிப்புடையது. சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது" என பதிவிட்டுள்ளார்.
குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் கடந்த 11-ந்தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்