என் மலர்
நீங்கள் தேடியது "Cabinet"
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
- இதில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.315 ஆக உயர்த்த முடிவானது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2023-2024 ஆண்டு கரும்பு பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், குவிண்டாலுக்கு ரூ.305 ஆக இருந்த கரும்பு விலை, ரூ.315 ஆக உயர்கிறது.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. 2014-2015 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.210 ஆக இருந்த கரும்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போது ரூ.315 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க நிதி உதவி அளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய சட்டம் நீக்கப்பட்டு, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிரதமர் மோடி தலைமையில் 15 முதல் 25 பிரபல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவால் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கப்படும் என தெரிவித்தார்.
- அமைச்சரவைக் கூட்டத்தின் போது, டிஜிட்டல் இந்தியா திட்ட விரிவாக்கத்திற்கு பட்ஜெட் ஒதுக்கி பிரதமர் மோடி ஒப்புதல்.
- 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டை ஒதுக்கி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சியின் விரிவாக்கத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் விரிவாக்க கட்டம் அதன் முந்தைய மறு செய்கையின் சாதனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 14,903 கோடி ரூபாய் கணிசமான பட்ஜெட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தார்" என்றார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாராட்டத்தக்க 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் 2.65 லட்சம் தனிநபர்கள் ஐடி துறையில் பயிற்சி பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஒன்பது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களின் விரிவாக்கம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்சிஎம்) கட்டமைப்பிற்குள் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் வேகத்தை வலியுறுத்தி, என்சிஎம் ஏற்கனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்களை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.
- இதில் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு 57, 613 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசு மற்றும் தனியார் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
57,613 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கும். இந்தத் திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
- மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார்.
- ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
புதுடெல்லி:
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். இஸ்ரோ நிறுவனம் சென்ற பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து அவர், ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என அறிவித்தார்.
இந்நிலையில், சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கிய ஆகஸ்டு 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
- கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
- அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.
கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.
இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
- புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும்.
முன்னதாக இன்று மோடியுடன் கேபினட் அமைசகர்களும் பதிவியேற்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து 78 முதல் 81 பேர் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுள் முக்கிய இலாகாக்களான நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய துறைகளை சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் இன்று மோடியுடன் பதவியேற்க உள்ளதா தகவல் வெளியாகியாகியுள்ளது. முக்கிய துறைகளில் பாஜகவினரே இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது.
அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் யூகங்களும் எழத் தொடங்கியுள்ளன. இந்த முறை பாஜக ஆட்சியமைக்க 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி கட்சியும், 16 சீட் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய காரணமாக உள்ளதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அடிபோடுவதாக தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள யூகங்களின்படி, விவசாயம், பழங்குடியின நலன், சிறுபான்மையினர் நலன், கல்வி, சிறு குறு தொழித்துறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் எல்.பி.ஜெவுக்கும், ஜவுளித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை ஜே.டி.யுவுக்கும், திறன் மேம்பாட்டுத் துறை ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேச மாநிலம் அப்னா தளம் கட்சியை சேர்ந்த அனுபிரியா பட்டேல், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெய்ந்த சவுத்ரி, பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங், லொக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், ஜித்தமன் ராம் மஞ்சி, சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ், ஷிராங் பர்னே ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
- இணையமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்
- மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை
மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 17 இடங்களில் மட்டும் தான் வென்றது. அதில் 1 இடத்தில் மட்டும் தான் அஜித் பவார் கட்சி வென்றது. அக்கட்சியின் பிரஃபுல் படேல் எம்.பி.யாக தேர்வானார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பிரஃபுல் படேலுக்கு வழங்கப்பட்ட இணையமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம் பெறவில்லை.
இது தொடர்பாக பேசிய மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார், "பிரஃபுல் படேல் ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். அப்படி இருக்கும்போது இணையமைச்சர் பதவியை ஏற்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டுள்ளோம். அமைச்சர் பதவிக்காக காத்திருக்க தயார் என பாஜக தலைமையிடம் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
- புதிய அமைச்சரவையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு 11 இடங்கள் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவின் மோடி 1.0 அமைச்சரவையில் 48 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நேற்று இரவு நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக 3 வது முறையாக பதவியேற்றார். அவருடன் 72 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

புதிய அமைச்சரவையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு 11 இடங்கள் வரை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களை போல் அல்லாது இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ள பாஜக ஆட்சியமைப்பதற்கு கூட்டணி கட்சிகளின் தயவை எதிர்நோக்கியது.
குறிப்பாக 16 சீட் வைத்துள்ள சநதிரவிபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், 12 சீட் வைத்துள்ள நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இந்த தேர்தலில் கேம் சேஞ்சர்களாக செயல்பட்டன. இந்நிலையில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகபட்சமாக 72 பேரைக் ககொண்ட அமைச்சரவையை பாஜக உருவாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவின் மோடி 1.0 அமைச்சரவையில் 48 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். அதன்பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் எம்.பி எண்ணிக்கை சற்றே குறைந்த நிலையில் 2.0 வில் 58 நபர்களைக் கொண்ட அமைச்சரவையை மோடி உருவாக்கினார். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து மோடி 3.0 வில் 72 ஆக மாறியுள்ளது.

நாட்டில் நடக்கும் ஒரு ஆட்சியில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது ஆட்சியில் பலவீனத்தை குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இந்த முறை பாஜக ஆட்சி 1 வருடம் கூட நீடிக்காது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
- இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தீர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், 'சேவையாற்ற நான் விரும்புகிறேன்' [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
- மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு
கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.
மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
- தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் வைத்து நடந்து முடிந்தது. இதில் மற்ற அரசியல் கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து விஜய் பேசிய விஷயங்கள் பேசுபொருளாகி வருகிறது. மேலும் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக சார்பில் சமீபத்தில் இந்த கோரிக்கை ஒலிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது விஜய் கூறியுள்ளது அதை மீண்டும் தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன் முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.
ஆகவே தாங்கள் தற்பொழுது நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி, தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.
எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
இந்தியாவில் ஒரே நாடு ஒரே சந்தா (one nation one subscription) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் எளிமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களை படிக்க முடியும். அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்.
மத்திய துறை திட்டமாக 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா திட்டமானது இந்தியா முழுவதும் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்து, உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தரவுகளை பெறும் வழிகளை கணிசமாக மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா (ONOS) திட்டம் பல்வேறு துறைகளில் பரந்த அளவிலான சர்வதேச இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு டிஜிட்டல் அணுகலை வழங்குவம். இந்தத் திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய R&D நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைய பத்திரிகைகளின் சேகரிப்புகளை பயன்படுத்தும் வசதியை பெறுவார்கள்.
ஜனவரி 1, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த தளம், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் (INFLIBNET) மூலம் நிர்வகிக்கப்படும். முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு உயர்தர ஆராய்ச்சியை பயன்படுத்த வழி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முயற்சியால் இந்தியாவில் உள்ள சுமார் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளின் பரந்த அளவிலான தனிநபர்களை உள்ளடக்கியது.