search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Calling"

    3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் துள்ள தாவது-

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வ தேச அளவிலான போட்டி களில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் வகை யில், அவர்களுக்கு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கோடை கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளை யாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஒ.சி.) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ஐ.எஸ்.எப்.) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பி யன்ஷிப் போட்டிகள்,

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டு களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஐ.ஒ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப். -ன் கீழ் நடத்தப்ப டும் காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள்,

    ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளை யாட்டு சங்கம், காது கேளாதோ ருக்கான சர்வதேச விளை யாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளை யாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

    அதன்படி தேசிய விளை யாட்டு போட்டிகள், இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பு களால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள். மாநில அளவி லான சாம்பியன்ஷிப் போட்டி களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள்.

    எனவே அரியலூர் மாவட் டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுத லின்படி 3 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங் கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது.

    விண்ணப்பத்தினை பதிவி றக்கம் செய்து உரிய இணைப் புகளுடன் வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் மேற்கா ணும் இணையதள முகவரி யிலோ அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்

    மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித் துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இய க்குநர் பெரியசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களாகிய விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், நுண்ணீர் பாசனமுறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முதலான மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பிற விவசாயிகளும் இவற்றைப் பின்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநரிடம் உத்தேச அறுவடை தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்பிக்க வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கும் விவசாயி அறுவடை தேதியைத் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநரிடம் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கடன் மேளாவில் கலந்து கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அைழப்பு
    • கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களிலும் கடன் மேளா நடத்தப்படுகிறது என்று மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நுற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் கொண்டா டப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் கடன் மேளா நடத்தப்படுகிறது.

    அதன்படி இன்று(செப்.15) அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் உள்ள 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், செப்.22 ஆம் தேதி செந்துறை, ஜெய ங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றிய ங்களில் உள்ள 40 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் மேளாக்கள் நடைபெற்றது.

    இம்மேளாக்களில் வைப்புகள் திரட்டுதல், பயிர்க்கடன், சுய உதவிக் குழுக் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், டாப்செட்கோ கடன். டாம்கோ கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன், மத்திய காலக் கடன் மற்றும் தான்ய ஈட்டுக்கட ன்களு க்கான விண்ணப்ப ங்கள் விநியோகி த்தல், புதிய சேமிப்பு கணக்குகள் துவங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் கடன் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • இலவச முயல் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
    • 12- ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 12- ந் தேதி நடைபெறும் முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து அம்மைய தலைவர் டாக்டர் சுரேஷ்கு மார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்ப லூர் அருகே செங்குணம் - கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்க லைக்கழக ஆராய்ச்சி மைய த்தில் முயல் வளர்ப்பு குறி த்த இலவச நாள் பயிற்சி முகாம் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

    இதில் முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரி க்கும் முறை மற்றும் நோய்த்த டுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பு வோர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தி ற்கு நேரிலோ அல்லது செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் போது ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    • புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • அரசு பள்ளியில் படித்து மேல்படிப்புக்கு செல்லும் மாணவிகள்

    அரியலூர்

    தமிழக முதல்-அமைச்சரால் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 866 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

    தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

    இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809; 91500 56805; 91500 56801 மற்றும் 91500 56810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

    மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும், விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்படவுள்ள நூலக நண்பர்கள் திட்டத்தில் சேர விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இணையலாம் என்று மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 65 நூலகங்களில் 40 நூலகங்களில் நூலக நண்பர்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாசிப்பில் ஆர்வம் உள்ள 200 தன்னார்வலர்களை கண்டறிவது தொடர்பாக அந்தந்த நூலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைவோருக்கு அடையாள அட்டை புத்தகங்களை எடுத்து செல்ல பை ஆகியவை வழங்கப்படும். முதலில் 25 நூல்கள் வழங்கப்பட்டு அவற்றை விநியோகித்த பிறகு மீண்டும் நூல்கள் வழங்கப்படும். இவ்வாறு மாதத்திற்கு 2 முறை நூல்கள் வழங்கப்படும்.

    நூலகத்திலிருந்து நூல்களை பெற்றுச்சென்று நூல்களை விநியோகிப்பது. விநியோகித்த நூல்களை திரும்ப பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். எனவே இந்த திட்டத்திலே சேர ஆர்வமுள்ள தன்னார்லர்கள் இணையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும்.
    • வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்துக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், துணை ஒருங்கிணை–ப்பாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை சுயநலத்திற்காக ஒருவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

    எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அ.தி.மு.க.வை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். ஒற்றை தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திருடி சென்றதாக கூறும் பட்டியலை அவர்களால் கூற முடியுமா?

    மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறார் ஈ.பி.எஸ். அதை நாங்கள் சந்திப்போம். கட்சிக்காக உழைத்தவர்கள் என அனைவரும் ஒன்றாக, வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வராமல் போனால் போகட்டும். தொண்டர்கள் தற்போது

    ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். மற்ற கட்சிகளை அ.தி.மு.க விவகாரத்தில் இணைத்து பேசாதீர்கள். இது உள்கட்சி பிரச்சனை.

    மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×