என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CALQUARY"

    • பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார்.மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் ஜெகபர் அலி

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் லாரி உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.

    கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.

    இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?

    கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும் என்று எடபப்டி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் லாரி உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

    கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படுகொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

    கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.

    ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • கல்குவாரியில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் கல் குவாரி இயங்குவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது கல்குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அங்கு சோதனை நடத்தியபோது பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களான ஜெலட்டின் குச்சி 78 பாக்கெட் மற்றும் ஜெலட்டின் குச்சி 11 வயர் 50 மீட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை நடத்தியதில் 1 ஏக்கர், 35 சென்ட் பரப்பளவு உள்ள பாறையில் வெடி மருந்துகள் வைத்து பாறைகளை தகர்த்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×