search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Calves"

    • பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
    • பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த மாடு அடுத்தடுத்து இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றது.

    இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர். பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.

    கலப்பின மாடுகளுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறை கையாளப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பில் சினை பிடித்த பசுமாடு, 2 கன்றுகள் ஈன்றுவது அடிக்கடி நடக்கிறது. பசுவையும், கன்றுகளையும் நன்கு பராமரிக்க மரக்காணம் கால்நடைத் துறையின் ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் நேரில் பார்வையிடவும் விவசாயி கதிரவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    • புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் சினை பெறாத கால்நடைகளுக்கு மலடு நீக்கி சிகிச்சை, பருவத்தில் உள்ள பசு எருமைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு குடல் புழு நீக்கம், மேலும் உற்பத்தி திறன் அதிகரிக்க கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், தஞ்சாவூர் கால்நடை பெரும்பாக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தினால் புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இம் மருத்துவ முகாமி ல்கால்நடை ஆய்வாளர் செல்வேந்திரன், கால்நடை மருத்துவர்கள் கலியபெ ருமாள், தினேஷ்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர் மேலும் கால்நடை மருத்துவ முகாமி ல் காண ஏற்பா டுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணை யன் சிறப்பாக செய்திருந்தார். முகாமில் அக்கரைவட்டம் கிராமம் அதனை சுற்றியுள்ள கிராம சேர்ந்தவர்கள் தனது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.

    • கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர்
    • 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 45). விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அவர் வைத்திருந்த ஒரு பசு மாடு கன்று போடும் நிலையிலிருந்தது. சம்பவத்தன்று மாலையில் கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் வெகு நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அவரது உறவினர் மூலம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபாளையத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்ற உதவி கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். இதில் 3 கன்றுகளுமே காளைக்க ன்றுகளாக இருந்துள்ளது. ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது. ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்ற முடிந்தது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரி யத்தை ஏற்படுத்தினாலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மிட்டவுன் ரோட்டரி சங்க 2981 ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. செல்வநாதன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் தா.

    சென்னுகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன்,

    ரோட்டரி உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்

    டி.ராமலிங்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டார்.

    ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சி.குருசாமி, எம்.நடராஜன், ஜி.மனோகரன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், டாக்டர் கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஹரிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ரோட்டரி செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரோட்டரி பொருளாளர் டி.அன்பழகன் நன்றி கூறினார்.

    ×